Karnataka High Court has shifted the judge exam due to pregnancy | கர்ப்பிணிக்காக நீதிபதி தேர்வை இடம் மாற்றிய கர்நாடக ஐகோர்ட்

பெங்களூரு:பெங்களூரில் இன்று நடக்கும் சிவில் நீதிபதி முதன்மை தேர்வை, மங்களூரைச் சேர்ந்த ஒன்பது மாத கர்ப்பிணி, தன் சொந்த ஊரிலேயே எழுத கர்நாடக உயர் நீதிமன்றம் சிறப்பு அனுமதி வழங்கி உள்ளது.

கர்நாடக உயர் நீதிமன்றம், 57 சிவில் நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டது. கடந்த ஜூலையில் முதல்நிலை தேர்வு நடந்தது.

அதில் 6,000 பேர் பங்கேற்றனர். அவர்களில், 1,022 பேர் பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றனர். இந்த தேர்வு இன்று பெங்களூரில் நடக்கிறது.

பிரதான தேர்வுக்கு தகுதி பெற்ற மங்களூரைச் சேர்ந்த நேத்ராவதிஎன்பவர், ஒன்பது மாத கர்ப்பிணியாக இருப்பதால், மருத்துவக்காரணங்களால் பெங்க ளூருக்கு பயணிக்க முடியாது என்றும், சொந்த மாவட்டத்திலேயே தேர்வெழுத அனுமதிக்கும்படியும் கோரிக்கை வைத்திருந்தார்.

இதை விசாரித்த நேரடி தேர்வுகளுக்கான உயர் நீதிமன்ற குழுவில் உள்ள நீதிபதிகள், அந்த கர்ப்பிணி ஒருவருக்காக மட்டும், மங்களூரு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தேர்வு நடத்த அனுமதி வழங்கினர்.

இதற்கு கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசன்ன பி வரலேஒப்புதல் வழங்கினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.