உச்சகட்ட கோபத்தில் மாடல்கள்… AI பெண்ணுக்கு எகிறும் மார்க்கெட் – மாத சம்பளம் ரூ. 9 லட்சமாம்!

AI Model Aitana Lopez: மாடலிங் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மூலம் ஒரு மாடலை உருவாக்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மாடல்கள் மற்றும் சமூக வலைதள பிரபலங்களின் கோபத்திற்கு இந்த ஏஐ மாடல் ஆளாகியுள்ளது என்றால் அது மிகையாகாது. 

மனித பெண் போன்ற அந்த செயற்கை நுண்ணறிவு மாடல், சிறப்பான மாடலிங் பணியை மேற்கொள்ளத்தக்கது. மேலும், அந்த செயற்கை நுண்ணறிவு மாடல் மாதந்தோறும் ரூ.9 லட்சம் வரை சம்பாதிக்கிறது.

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரைச் சேர்ந்த மாடலிங் ஏஜென்சியான தி க்ளூலெஸ் (The Clueless), நாட்டின் முதல் பிரீமியம் செயற்கை நுண்ணறிவு இன்ஃப்ளூயன்ஸர் எட்டானா லோபஸை (Aitana Lopez) அறிமுகப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவால் செல்வாக்கு இயக்கப்படும் எட்டானா லோபஸ், ரூபன் குரூஸால் உருவாக்கப்பட்டது. 

இந்த ஏஐ மாடல் ஒரு புரட்சியைக் கொண்டு வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் யூரோக்கள் (9 லட்சம் ரூபாய்) இந்த ஏஐ மாடல் சம்பாதிக்கிறது. ஏஐ மூலம் இயக்கப்படும் இந்த எட்டானா லோபஸ் 25 வயது மதிக்கத்தக்க பெண்ணை ஒத்தது, மேலும் பெரும்பாலனோரால் அதிகம் விரும்பப்படும் இளஞ்சிவப்பு நிறத்தில் தலைமுடியும் (Pink Hair) வைக்கப்பட்டுள்ளது.

மில்லியனை தாண்டும் ஃபாலோயர்ஸ்

எட்டானா லோபஸ் இன்ஸ்டாகிராம் கணக்கில் 124,000 பின்தொடர்பவர்கள் உள்ளனர். இந்த உருவாக்கியவர் ரூபன் குரூஸ் ஒரு நேர்காணலில் உண்மையான மாடல்கள் மற்றும் சமூக வலைதள பிரபலங்களால் தங்களின் ஏஜென்சி மிகவும் சிக்கலை சந்தித்ததாக விளக்கினார். மாடல்களை பணிகளில் அமர்த்தினால் ஒன்று தாமதமாகின்றன அல்லது அவர்கள் வருவதேயில்லை. டிசைனில் எந்த பிரச்னையும் இல்லாதபட்சத்திலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போது எட்டானா லோபஸிடம் அந்த பிரச்னையில் என்கிறார். 

 

 
 

 

View this post on Instagram

 

 
 
 

 
 

 
 
 

 
 

A post shared by Aitana Lopez (@fit_aitana)

இன்ஸ்டாகிராமில் எகிறும் பாலோயர்ஸ்

இந்த ஏஐ இன்ஸ்டாகிராமில் பலராலும் அறியப்படும் நிலையில், அவரை உண்மையான பெண் என நினைத்து பலரும் அவரை டேட்டிங்கிற்கு அழைத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ‘Barcelona. Gamer. Fitness. Cosplay Lover’ என சுயவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை 56 புகைப்படங்கள் அதில் பகிரப்பட்டுள்ளன. அதில் அந்த ஏஐ காக்டெய்ல் குடிப்பது முதல் ஜிம்மிற்குச் செல்வது வரையிலான படங்கள் பதிவிடப்பபட்டுள்ளன. 

அவரின் வாழ்க்கை முறை அந்த புகைப்படங்கள் மூலம் காட்டப்படுகிறது. அந்த இடுகையை பலரும் கவரும் வகையில் இருக்கும் வேண்டும் என்பதால் The Clueless ஏஜென்சி ஃபோட்டோஷாப் பயன்படுத்துகிறது. Fanvue தளத்திலும் லோபஸுக்கு ஒரு சுயவிவரம் உள்ளது, அங்கு லோபஸ் உள்ளாடைகளில் மட்டும் இருப்பது போன்ற புகைப்படும் காணப்படுவதாக கூறப்படுகிறது. Fanvue என்பது Only Fans போல் மட்டும் சந்தா செலுத்தி ரசிகர்கள் உடன் மட்டும் தொடர்பில் இருக்கும் தளமாகும்.  

இந்த ஏஐ மாடலை உருவாக்கிய க்ரூஸ், இந்த மாடலின் ஆளுமையை விவரித்தார். அவர் வலிமையான மற்றும் உறுதியான பெண்ணாக பொதுவெளியில் காட்டப்படுகிறார். இணையதளத்தில் அவரது சுயவிவரமும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. இது தவிர வீடியோ கேம்கள் மற்றும் உடற்தகுதி ஆகியவற்றில் ஆர்வமாக உள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளோம். ஒரு விளம்பரத்துக்கு ஆயிரம் யூரோவுக்கு மேல் சம்பாத்திக்கிறார் என்றார்.

மேலும், ஏஐ மாடலுக்கும் இன்ஸ்டாகிராமில் டேட்டிங் செய்ய மெசேஜ் அனுப்பவதாக கூறி பின்வரும் சம்பவத்தை தெரிவித்தார. அதில்,”ஒரு நாள் ஒரு பிரபலமான லத்தீன் அமெரிக்க நடிகர், இந்த ஏஐ மாடலை தன்னுடம் டேட்டிங் வரும்படி குறுஞ்செய்தி அனுப்பினார். இந்த நடிகருக்கு சுமார் 5 மில்லியன் பாலோயர்கள் உள்ளனர், மேலும் எங்கள் குழுவில் சிலர் குழந்தைகளாக இருந்தபோது அவரது டிவி தொடர்களைப் பார்த்ததாக கூறினார். அவருக்கு இது வெறும் ஏஐ என்பது தெரியவே இல்லை” என்றார்.

மேலும் படிக்க | இது டிஸ்பிளேவே இல்லாத ஸ்மார்ட்போன்… ஆடையிலேயே ஓட்டிக்கலாம்! – மிரட்டும் AI Pin சாதனம்
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.