எம்.ஜி.ஆர், சிவாஜி முதல் கமல், விஜய் வரை… கட்சி தொடங்கிய சினிமா புள்ளிகள்! | Visual Story

எம்.ஜி.ஆர் தொடங்கி விஜய் வரை… தமிழ்நாட்டில் சினிமாவிலிருந்து அரசியல் பிரவேசம் செய்து, கட்சி தொடங்கிய `திரைப்’பிரபலங்கள் குறித்துப் பார்க்கலாம்!

தி.மு.க-விலிருந்த எம்.ஜி.ஆர், 1972-ல் அ.தி.மு.க-வைத் தொடங்கினார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தி.மு.க, காங்கிரஸில் இருந்தவர். பின் 1988-ல் `தமிழக முன்னேற்ற முன்னணி’ என்ற கட்சியைத் தொடங்கினார். ஆனால், அடுத்த ஆண்டே கட்சியை கலைத்துவிட்டார்.

நடிகர் பாக்கியராஜ் `எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியை 1989-ல் தொடங்கினார்.

2005-ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் கட்சியைத் தொடங்கிய கேப்டன் விஜயகாந்த், 2011-ம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராக தமிழக அரசியலில் உயர்ந்தார்.

ஆரம்பத்தில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக இருந்த நடிகர் டி.ராஜேந்தர், 2005-ல் `அனைத்திந்திய இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற பெயரில் கட்சி தொடங்கினார்.

நடிகர் கார்த்திக், அனைத்திந்திய ஃபார்வார்டு பிளாக் கட்சியின் தலைவராக இருந்து, பின்னர்… 2009-ல் நாடாளும் மக்கள் கட்சியைத் தொடங்கினார்.

1996-ல் தி.மு.க-வில் இணைந்த சரத்குமார், 2007-ம் ஆண்டு மனைவி ராதிகாவுடன் இணைந்து, அனைத்து இந்திய சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார்.

இயக்குநரும், நடிகரும் அரசியல் ஈடுபாட்டாளருமான சீமான், 2010-ம் ஆண்டு, நாம் தமிழர் கட்சியைத் தொடங்கினார்.

2018-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை, நடிகர் கமல் ஹாசன் தொடங்கினார்.

சீமானின் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய நடிகர் மன்சூர் அலிகான், 2021-ல் தமிழ் தேசிய புலிகள் என்கிற கட்சியைத் தொடங்கினார்.

விஜய்

இன்று, நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.