கருப்பு, மஞ்சள், வெள்ளை.. ஒவ்வொரு நம்பர் பிளேடுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா?

Vehicle Number Plate Color: உலக அளவில் இந்தியா மிகப்பெரிய கார் விற்பனை சந்தையாக உள்ளது. கடந்த 2024ம் ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 41 லட்சத்துக்கும் அதிகமான கார்கள் விற்பனை ஆகி உள்ளது.  இவ்வளவு கார்கள் விற்பனை ஆகி இருப்பதை கருத்தில் கொண்டு ஒரு குறிப்பிட்ட வேலையில் இருப்பவர்கள் அல்லது ஒரு துறையை சார்ந்தவர்கள் மட்டும் கார்களை வாங்கி இருக்க மாட்டார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. அனைத்து துறைகளில் வேலை செய்பவர்களும், சொந்த தொழிலில் ஈடுபடுபவர்களும் தங்களது தேவைகளுக்காக கார்களை வாங்கி இருக்க வேண்டும்.  ஒவ்வொருவரின் தேவைகளில் அடிப்படையில் கார்களின் நம்பர் பிளேட் வண்ணங்கள் மாறுகிறது.  

நாம் தினசரி பார்க்கும் கார்களில் அதிகமாக வெள்ளை, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம் கொண்ட நம்பர் பிளேட்களை பார்த்து இருப்போம். பொதுவாக சாலைகளில் வெள்ளை நிற நம்பர் பிளேட்கள் கொண்ட கார்கள் அதிகளவில் இருக்கும். அதற்கு அடுத்தபடியாக மஞ்சள் நிறங்கள் கொண்ட நம்பர் பிளேட் இருக்கும்.  ஒரு நாட்டின் போக்குவரத்து நிர்வாகத்தை முறையாக நடத்த இந்த வண்ண நம்பர் பிளேட் முறை கொண்டுவரப்பட்டு நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு வண்ண நம்பர் பிளேடும் ஒவ்வொரு அர்த்தத்தை குறிக்கிறது.  அது என்ன என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். 

White Colour Number Plate: இது மிகவும் பொதுவாக வழங்கப்படும் நம்பர் பிளேட் ஆகும். ஒரு நாட்டில் உள்ள குடிமக்களின் சொந்த தேவைகளுக்காக வாங்கப்படும் கார்களுக்கு வெள்ளை நிற நம்பர் பிளேட் வழங்கப்படுகிறது.  கார்கள், இரு சக்கர வாகங்களுக்கு வழங்கப்படுகிறது.  இருப்பினும், சரக்கு போக்குவரத்து போன்ற வணிக நோக்கங்களுக்காக இதை பயன்படுத்த முடியாது.

Yellow Colour Number Plate: வணிக வாகனங்களாக டாக்சி, ஆட்டோ ரிக்ஸா, லாரி, பஸ் போன்றவற்றிக்கு மஞ்சள் நிற நம்பர் பிளேட் வழங்கப்படுகிறது. மஞ்சள் வண்ண பிளேட்டில் கருப்பு கலரில் வாகன எண்ணை எழுதினால் அது வணிக வாகனம் ஆகும்.  ஓட்டுநர்கள் வணிக வாகனம் ஓட்ட தனி ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

Green Colour Number Plate: பச்சை நிற நம்பர் பிளேட் மின்சார வாகனங்களுக்கு தற்போது வழங்கப்படுகிறது. இருசக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனத்தில் பச்சை நிற நம்பர் பிளேட் இருந்தால், அது மின்சார வாகனம் என்று புரிந்து கொள்ளலாம்.

Red Colour Number Plate: ஒரு வாகனத்திற்கு தற்காலிக பதிவு எண்ணிற்காக சிவப்பு நம்பர் பிளேட் கொடுக்கப்படுகிறது. அதிகமாக இந்த நம்பர் பிளேட் வாகன டீலருக்கு வழங்கப்படுகின்றன மற்றும் நிரந்தர பதிவு எண் தேவைப்படாதவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.  மேலும் இந்த வகை நம்பர் பிளேட் இந்திய ஜனாதிபதி மற்றும் பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களில் நம்பருக்கு பதிலாக இந்திய சின்னம் இருக்கும். இருப்பினும், பிரதமர் பயன்படுத்தும் காரின் நம்பர் பிளேட் வெள்ளை நிறத்தில் இருக்கும்.

Blue Colour Number Plate: வெளிநாட்டு பிரதிநிதிகள் அல்லது தூதர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களுக்கு நீல நிற நம்பர் பிளேட் வழங்கப்படுகிறது. தூதரக வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள் நீல நிறத்தில் இருக்கும்.  மேலும் இந்த கார்களில் இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தின் குறியீட்டிற்கு பதிலாக தூதரக நாட்டின் குறியீட்டை பெற்று இருக்கும்.

Military Vehicles: இந்திய இராணுவ வாகனங்கள் மற்ற வாகன நம்பர்களை போல் இல்லாமல், தனித்துவமான 11 இலக்கங்களை கொண்ட எண் முறையைப் பின்பற்றுகின்றன. இந்த வாகன எண்கள் டெல்லியில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.