FASTag பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆர்பிஐ!

Paytm நிறுவனத்திற்கு எதிராக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. வரும் பிப்ரவரி 29க்குப் பிறகு, பேடிஎம் தொடர்பான சேவைகள் நிறுத்தப்படும் என்று கூறி உள்ளது. அதன்படி, பேடிஎம் வாலட்கள், FASTag போன்ற சேவைகளில் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.  மேலும் அதன் வாடிக்கையாளர்கள் அவர்களது பேடிஎம் கணக்கில் டெபாசிட் அல்லது டாப் அப் செய்ய முடியாது என்று ரிசர்வ் வங்கி புதன்கிழமை தெரிவித்தது. ஆர்பிஐ-யின் இந்த நடவடிக்கை Paytm-ன் அனைத்து செயல்பாடுகளையும் முடக்கி உள்ளது.  இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிப்ரவரி 29க்குப் பிறகு, வாடிக்கையாளர் பேடிஎம் கணக்கு, ப்ரீபெய்ட், வாலட், ஃபாஸ்டேக் போன்றவற்றில் டெபாசிட் செய்ய முடியாது.  மேலும் புதிய கடன் பரிவர்த்தனைகள் அல்லது டாப் அப்கள் அனுமதிக்கப்படாது” என்று கூறி உள்ளது.

Paytm FASTag செயல்படாது?

FASTag என்பது இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலையில் (NHAI) செல்வதற்கு கட்டணம் செலுத்த பயன்படும் ஒரு மின்னணு அமைப்பாகும். சுங்கச்சாவடியில் பணமாக கொடுத்து செல்ல அதிக நேரம் எடுப்பதால், நான்கு சக்கர வாகனங்களில் கண்டிப்பாக FASTag இருக்க வேண்டும் என்று இந்திய அரசாங்கம் உத்தரவிட்டது.  அதன்படி, FASTag ஒட்டாத கார்களுக்கு கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்பட்டது.  ப்ரீபெய்ட் வாலட்களைப் பயன்படுத்தி டோல்கேட்டுகளில் பணம் செலுத்துவதற்கு ரேடியோ அதிர்வெண் (RFID) தொழில்நுட்பம் பயன்படுத்துகிறது.  பேடிஎம் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு ஆர்பிஐ தடை விதித்து இருந்தாலும், ஏற்கனவே பேடிஎம் வாலட்டில் உள்ள பணத்தை நீங்கள் பயன்படுத்த முடியும். அதன்படி, Paytm FASTagயில் உள்ள பணத்தை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம். 

You can continue using the existing balances on your Paytm FASTag. We started our journey of working with other banks over the last two years, which we will now accelerate pic.twitter.com/clsDLVUD1N

— Paytm (@Paytm) February 1, 2024

Paytm கொடுத்துள்ள விளக்கம்

இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த புதிய நடவடிக்கைக்கு Paytm நிறுவனம் பதில் கூறி உள்ளது.  வாடிக்கையாளர்கள் தங்கள் Paytm Wallets, Paytm FASTags போன்றவற்றில் இருக்கும் தொகையை தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று தெளிவுபடுத்தி உள்ளது.  பிப்ரவரி 29க்குப் பிறகு கூடுதலாக சேர்க்க முடியாது என்று கூறி உள்ளது.  மேலும், இந்தியாவில் இருக்கும் வணிகர்களுக்கு Paytm QR, Paytm Soundbox, Paytm Card Machine போன்ற கட்டண சேவைகளை தொடர்ந்து வழங்கும் என்றும் கூறியுள்ளது.  Paytm Payments Bank தற்போது 330 மில்லியன் வாலட் கணக்குகளை கொண்டுள்ளது.  100 மில்லியன் மாதாந்திர பரிவர்த்தனை கொண்ட பயனர்களையும் கொண்டுள்ளது.

Paytm எப்போது தொடங்கப்பட்டது?

இந்தியாவில் கடந்த 2027ல் Paytm Payments Bank (PPBL) தொடங்கப்பட்டது.  வங்கி சேவைகள் மற்றும் சேமிப்பு கணக்குகளை டிஜிட்டல் மூலம் வழங்கி வந்தது.  இது இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) அங்கீகரிக்கப்பட்ட பணம் செலுத்தும் வங்கியாக செயல்பட்டது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.