iPhone யூசர்களுக்கு அரசின் கடும் எச்சரிக்கை! வங்கி கணக்கில் பணம் காணாமல் போகலாம்

இப்போது ஹேக்கர்கள் தொல்லை அதிகரித்துவிட்டதால் மொபைல் யூசர்கள் விழிப்புடன் இருப்பது அவசியம். அதேபோல் தாங்கள் பயன்படுத்தும் மொபைல் நிறுவனம் சொல்லும் பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அவர்கள் சொல்லும் அப்டேட்டுகளை உடனுக்குடன் செய்ய வேண்டும். இல்லையென்றால் மொபைல் யூசர்களின் தனிப்பட்ட விவரங்கள் எல்லாம் இணையத்தில் லீக்காகிவிடும். ஹேக்கர்கள் கையில் சிக்கி பின் விளைவுகளையும் சந்திக்க நேரிடும். அந்த வகையில் ஆப்பிள் மொபைல் யூசர்களுக்கு அரசிடம் இருந்து எச்சரிக்கை வந்திருக்கிறது.

அதன்படி அரசு CIAD-2024-0007 என்ற எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் iPhone மற்றும் Mac பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்படலாம் என்றும், இதனால் வங்கி கணக்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே, iPhone மற்றும் Mac பயனர்கள் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் கொடுத்திருக்கும் பாதுகாப்பு வழிமுறைகளை அவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

ஆப்பிள் யூசர்கள் பிரைவசி டேட்டா திருடப்படாமல் இருக்க செய்ய வேண்டியவை: 

– உங்கள் ஸ்மார்ட்போனை எப்போதும் அப்டேட் செய்யப்பட்ட வைத்திருங்கள். அப்டேட் என்பது பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்கின்றன. ஹேக்கர்கள் உங்கள் தரவை திருடுவதை கடினமான வேலியாக அமைகின்றன.

– உங்கள் லொகேஷனை எப்போதும் ஆப் செய்து வைத்திருங்கள். பல செயலிகள் உங்கள் இருப்பிடத்தை கண்காணிக்கின்றன. இது ஹேக்கர்களுக்கு உங்கள் பற்றிய தகவல்களை சேகரிக்க உதவும்.

– செயலிகளுக்கு “Allow location tracking” அனுமதியை வழங்க வேண்டாம். தேவைப்படும்போது மட்டுமே இந்த அனுமதியை வழங்கவும்.

– சந்தேகத்திற்குரிய செயலிகளை இன்ஸ்டால் செய்வதை தவிர்க்கவும். App Store அல்லது Google Play Store -லிருந்து மட்டுமே செயலிகளை பதிவிறக்கவும்.

– வலுவான கடவுச்சொற்களைப் (Passwords) பயன்படுத்தவும். உங்கள் கடவுச்சொற்கள் குறைந்தது 12 எழுத்துக்கள் நீளம் கொண்டதாகவும், Capital Letters, Small Letters, எண்கள் கலவையாகவும் இருக்க வேண்டும்.

– இரண்டு காரணி அங்கீகாரத்தை (2FA) இயக்கவும். 2FA, உங்கள் கணக்கிற்கு கூடுதல் பாதுகாப்பை சேர்க்கிறது.

– அதேநேரத்தில், iPhone 15 தொடருக்கு இதுவரை எந்த எச்சரிக்கையும் விடப்படவில்லை. மேலும் தகவலுக்கு, அரசாங்கத்தின் எச்சரிக்கை அறிவிப்பைப் பார்க்கவும்: https://www.cert-in.org.in/

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.