Jaishwal double Century: இரட்டை சதம் அடித்து யஷஸ்வி ஜெய்ஷ்வால் சாதனை..!

விசாகப்பட்டனம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஷ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் 35 ரன்களுக்கும் மேல் அடிக்காதபோது தனி ஒரு பிளேயராக களத்தில் நின்று, இங்கிலாந்து அணிக்கு எதிரான சிறப்பான பந்துவீச்சை எதிர்கொண்டு இப்படியொரு சாதனையை படைத்திருக்கிறார். இவர் ஒருவரின் பேட்டிங்கால் இந்திய அணி இப்போது வலுவான நிலைக்கு வந்திருக்கிறது. சிறப்பாக ஆடிய ஜெய்ஷ்வால் 209 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். அவர் அவுட்டானாதும் இங்கிலாந்து வீரர்கள் வரிசையாக வந்து ஜெய்ஷ்வாலுக்கு கை கொடுத்து பாராட்டினர். 

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டனத்தில் நடக்கிறது. டாஸ் வெற்றி பெற்று இந்திய அணி முதலில் பேட்டிங் இறங்கியது. வழக்கம்போல் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை விளையாடி விக்கெட்டை பறி கொடுத்து வெளியேறினார். அவர் மட்டுமல்ல அவருக்கு பின்னர் வந்த வீரர்களும் குறைந்த ரன்களுக்கு அவுட்டாக மறு முனையில் ஜெய்ஷ்வால் மட்டும் நிலைத்து நின்று விளையாடினார். 50, 100, 150 ரன்களை கடக்கும்போதெல்லாம் பவுண்டரி, சிக்சர் என விளாசிய அவர், 200 ரன்கள் எப்படி கடப்பார் என எல்லோரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். 191 ரன்கள் எடுத்திருந்தபோது சிக்சர், பவுண்டரி என அடுத்தடுத்து விளாசி தன்னுடைய முதலாவது இரட்டை சதத்தை சர்வதேச கிரிக்கெட்டில் பதிவு செய்தார். அதுவும் வலிமையான இங்கிலாந்து அணிக்கு எதிராக.

ஜேம்ஸ் ஆண்டர்சன், பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட உலக தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடி இரட்டை சதத்தை பதிவு செய்திருக்கிறார் ஜெய்ஷ்வால். அவருக்கு இந்திய அணி வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அதற்கு முன்பாக களத்திலேயே இங்கிலாந்து வீரர்கள் ஒவ்வொருவராக ஓடி வந்து ஜெய்ஷ்வால் விளையாடிய விதத்துக்கு பாராட்டு கூறினர். இந்த இரட்டை சதம் விளாசிய பிறகு ஜெய்ஷ்வால் பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார். அத்துடன் இந்திய கிரிக்கெட் அணியின் சாதனையாளர்கள் பட்டியலிலும் தன்னுடைய பெயரை இணைத்துக் கொண்டுள்ளார். 

இந்தியாவுக்காக டெஸ்டில் 200 ரன்கள் எடுத்த இளம் வீரர்கள்

21y 35d: வினோத் காம்பிளி – 224 vs Eng மும்பை WS 1993
21y 55d: வினோத் காம்பிளி – 227 vs ஜிம் டெல்லி 1993
21y 283d: சுனில் கவாஸ்கர் – 220 vs WI போர்ட் ஆஃப் ஸ்பெயின் 1971
22y 37d: ஜெய்ஸ்வால் – 209 vs Eng Vizag 2024

டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக இடது கை பேட்டர்களால் இரட்டை சதங்கள்

239 – சவுரவ் கங்குலி vs பாக் பெங்களூரு 2007
227 – வினோத் காம்ப்ளி vs ஜிம் டெல்லி 1993
224 – வினோத் காம்ப்ளி vs Eng மும்பை WS 1993
206 – கவுதம் கம்பீர் vs அவுஸ் டெல்லி 2006
209 – யஷஸ்வி ஜெய்ஸ்வால் எதிராக இங்கிலாந்து விசாகப்பட்டி 2024

குறைந்த இன்னிங்ஸில் இந்தியாவுக்காக 200 ரன்கள் அடித்த வீரர்கள்

3 இன்னிங்ஸ் – கருண் நாயர்
4 இன்னிங்ஸ் – வி காம்ப்ளி
8 இன்னிங்ஸ் – எஸ் கவாஸ்கர்/ எம் அகர்வால்
9 இன்னிங்ஸ் – சி புஜாரா
10 இன்னிங்ஸ் – ஒய் ஜெய்ஸ்வால்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.