யமஹா களமிறக்கும் அதிரடி பைக்குகள்… அலறப்போகும் இந்திய சந்தை – முழு விவரம்

Yamaha New Bikes 2024 In India: பைக், கார் போன்ற வாகனங்களை வாங்குவது தற்போது நடுத்தர வர்க்கத்திலும் சாதரணமாகிவிட்டது எனலாம். மாதத் தவணை போன்ற பல வழிகளில் இவற்றை தங்களின் தேவைகளுக்கு ஏற்ப வாடிக்கையாளர்கள் வாங்கிக்கொள்கின்றனர். 

யமஹா மீதான காதல்

குறிப்பாக, கல்லூரி செல்ல மகள்/மகன் பைக் வாங்குவது ஒருபுறம் என்றால், வேலைக்கும் தங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் பெற்றொருமே தனித்தனியே ஒரு வண்டியை வைத்துக்கொள்கிறேன். அந்த வகையில், குறைந்தபட்சம் ஒரு வீட்டிற்கு ஒரு பைக்கையாவது வைத்திருப்பதை பார்க்க முடிகிறது. 

தேவைக்கு வாங்குபவரகள் ஒரு ரகம் என்றால், பைக்கின் மேல் பித்தம் கொண்டு அதனை வாங்க துடிப்பவர்கள் மற்றொரு ரகம் எனலாம். அப்படி, பைக்கை பைத்தியமான பலருக்கும் யமஹா பைக்குகள் (Yamaha) என்றாலே தனிக் காதல்தான். குறிப்பாக, யமஹாவின் RX100 என்றால் சொல்லவே வேண்டாம். 

டெல்லி கண்காட்சி

இந்நிலையில், டெல்லியில் கடந்த பிப். 1ஆம் தேதி முதல் பிப். 3ஆம் தேதி வரை பாரத் மொபைலிட்டி கண்காட்சி (Bharat Mobility Expo 2024) நடைபெற்றது. இந்த நிகழ்வில் யமஹா தனது அசரவைக்கும் வெளிநாட்டு மாடல் பைக்குகள் உள்பட பல்வேறு மாடல்களை காட்சிப்படுத்தியது. அதிலும், யமஹாவின் R7 மற்றும் MT-07 பைக்குகள் பலரின் கவனத்தை ஈர்த்தன. 

இந்த இரண்டு பைக்குகளும் அடுத்த சில மாதங்களில் இந்திய சந்தையில் கால்பதிக்க உள்ளன. சென்னையில் சில மாதங்கள் முன் நடைபெற்ற யமஹா ட்ராக் டே நிகழ்விலும் இந்த இரு பைக்குகளும் காட்சிக்கு வந்தன. ஜப்பானிய நிறுவனமான யமஹா MT-07 மாடல் பைக்குகளை சர்வதேச அளவில் 2015ஆம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்திவிட்டது, R7 மாடல் பைக்குகள் 2022ஆம் ஆண்டு சர்வதேச சந்தைக்கு கொண்டுவரப்பட்டன.

இந்த இரு பைக்குகளின் எஞ்சின்கள் ஒரே மாதிரியானது என கூறப்படுகிறது. இருப்பினும், மற்ற சில அம்சங்களில் மாறுபாடுகள் ஏற்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த இரு பைக்குகள் குறித்து இங்கு சில தகவல்களை காணலாம். இவற்றை அறிந்துகொள்ளும் போது, இந்திய சந்தையில் இந்த இரு பைக்குகள் அறிமுகமாகும் போது எதை வாங்கலாம் என்ற தெளிவு உங்களுக்கு பிறக்கும் எனலாம். 

ஒரே எஞ்சின்… ஆனால் வேறு…

யமஹா R7 பைக் MT-07 மாடலின் அடிப்படை அம்சங்களை கொண்ட ஒரு ஸ்போர்ட்ஸ் பைக் எனலாம். யமஹா R7 மாடல் 689cc பேரலல்-ட்வின் எஞ்சின் கொண்டது. 73.4PS மற்றும் 67Nm சக்தியை இந்த பைக் உற்பத்தி செய்கிறது. MT-07 பைக்கிலும் இதே எஞ்சின்தான். ட்யூனிங், ஸ்டைலிங் ஆகியவற்றில் மட்டும் மாறுபாடு ஏற்படும். யமஹா பிரியர்கள் தங்களின் தேவைக்கேற்ப இதனை தேர்வு செய்யலாம். ரிலீஸ் தேதி மற்றும் விலை விரைவில் வெளியாகும்.

டெல்லி பாரத் மொபைலிட்டி கண்காட்சியில் யமஹா வெளிநாட்டு மாடல்களை போன்ற இந்திய மாடல்கள் சிலவற்றையும் காட்சிப்படுத்தியது. குறிப்பாக, Yamaha R, FZ மற்றும் MT சீரிஸ் பைக்குகளின் உள்நாட்டு மாடல்களையும் அதில் கொண்டுவந்துள்ள நிற மாற்றங்கள் ஆகியவற்றையு் காட்சிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.