TVK: "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்…" – வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்த விஜய்!

தமிழ்நாட்டு அரசியலில் நடிகர் விஜய் `தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்ததுதான் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.

நீண்ட வருடங்களாகவே விஜய் அரசியலுக்கு வருவார்… வருவார் என்று பலராலும் சொல்லப்பட்டிருந்த நிலையில், தற்போது நேரடியாக அரசியல் களத்தில் இறங்கியிருக்கிறார் விஜய். இந்நிலையில் விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கு நடிகர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் விஜய், தான் காமிட்டாகியுள்ள படத்தை முடித்துவிட்டு முழுமையாக அரசியலில் களம் இறங்குவதாகக் கூறியுள்ளார். இது அவரது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. இருப்பினும் முழு அர்ப்பணிப்புடன் அரசியலில் களமிறங்கி இருக்கும் விஜய்க்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன

இந்நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்.

இது குறித்து ‘தமிழக வெற்றி கழகம்’ கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்த பெருமதிப்புக்குரிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள், ‘என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்’ அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள்” என்று வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் விஜய்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.