பைக்கை சர்வீஸ் விடும் போது அதிக செலவு ஏற்படுகிறதா? செலவை குறைக்க வழிகள்!

Bike service: பைக் தினசரி பலரது வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. சரியான நேரத்திற்கு வேலைக்கு செல்லவும், வெளியில் ஒரு இடத்திற்கு செல்லவும், டிராக்கில் சிக்கிக் கொள்ளாமல் சரியான நேரத்தில் செல்லவும் என பல வகைகளில் உதவுகிறது.  இப்படி பல விதங்களில் உதவிகரமாக இருக்கும் பைக்கை சரியான முடியல பராமரிப்பது அவசியம், இல்லை என்றால் சர்வீஸ் விடும் போது அது அதிக செலவுகளை வைத்துவிடும். குறிப்பிட்ட சமயத்தில் இன்ஜின் ஆயில்களை மாற்றி, டயரில் காற்றை சரியான அளவில் வைத்து பராமரிக்க வேண்டும்.  நாம் என்னதான் சரியான நேரத்தில் பைக்கை சர்வீஸ் செய்தாலும், அடுத்த முறை சர்வீஸ் செய்யும்போது, ​​பல பாகங்களை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படுகிறது, இதனால் அதிக செலவு ஏற்படும்.

சிலருக்கு ஒவ்வொரு முறை பைக்கை சர்வீஸ் விடும் போதும் அதிக செலவுகள் ஏற்படும். பைக்கில் உள்ள பாகங்கள் உடைந்து அல்லது டேமேஜ் ஆகி இருக்கும், இதற்கு பைக்கை சரிவர பராமரிப்பது இல்லை என்பதே முக்கிய காரணமாக அமைகிறது.  இதனால் ஒவ்வொரு முறையும் கூடுதல் பணம் செலவழித்துக்கொண்டே இருப்பீர்கள். பைக்கில் ஒரு பாகம் சேதமடைந்து, அதனை கவனிக்காமல் விட்டுவிட்டால் மற்ற பகுதிகளும் சேதமடையத் தொடங்குகின்றன. இந்நிலையில், பைக்கை ஒவ்வொரு நாளும் எப்படி பராமரிக்க வேண்டும் மற்றும் சர்வீஸ் விடும்போது அதிக செலவுகளை வைக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

பைக்கில் ஒவ்வொரு 3000 – 5000 கிலோ மீட்டருக்கு ஒருமுறை எஞ்சின் ஆயிலை சரியான நேரத்தில் மாற்ற வேண்டும்.  லோக்கல் ஆயிலை ஊற்றாமல், நல்ல ஆயிலாக பார்த்து வாங்கி ஊற்றுங்கள்.  அதே போல பைக்கில் உள்ள ஏர் பில்டரை ஒவ்வொரு 2000 கிமீக்கும் தவறாமல் சுத்தம் செய்யுங்கள். செயின் மற்றும் ஸ்ப்ராக்கெட்டை ஒவ்வொரு 10,000 – 15,000 கிலோ மீட்டருக்கு ஒருமுறை மாற்றவும்.  அப்போதுதான் எந்தவித சத்தமும் இல்லாமல் ஸ்மூத் ஆக ஓடும். பிரேக் பேட்களின் நிலையை ஒவ்வொரு 10,000 – 15,000 கிலோ மீடருக்கும் தவறாமல் சரிபார்த்து மாற்ற வேண்டியது அவசியம்.

பைக்கில் டயரை பராமரிப்பது மிகவும் முக்கியமானது.  டயரில் தினசரி சரியான அளவு காற்று இருக்கிறதா என்பதை சரிபார்த்து கொள்ளுங்கள். அதே போல 20,000 கிலோ மீட்டருக்கு பிறகு டயரை கண்டிப்பாக மாற்ற வேண்டும்  பைக்கில் உள்ள பேட்டரிகளை சுத்தமாக வைத்து, சரியான நேரத்தில் சார்ஜ் செய்து வந்தால் ஒரு பேட்டரி 2-3 வருடங்களுக்கு வரும்.  முடிந்தவரை காலையில் கிக்கரில் ஸ்டார்ட் செய்தால் பேட்டரியின் ஆயுள் நீண்ட நாட்களுக்கு வரும். பைக் ஸ்டார் ஆக உதவும் ஸ்பார்க் பிளாக்கை சரியான நேரத்தில் மாற்றுவது நல்லது.  அதே போல பெட்ரோல் டேங்கை சுத்தமாக வைத்திருப்பது நல்லது. மழை காலங்களில் அதிக நேரம் மழையில் நிறுத்தாமல் இருப்பது நல்லது.  கிளட்ச் பிளேட்டுகளை ஒவ்வொரு 20,000 – 25,000 கிமீ ஒருமுறை மாற்றவும்.

பைக்கில் உள்ள இந்த பாகங்களை பராமரிப்பதன் மூலம் பைக் சர்வீஸிங்கிற்கு போது தேவை இல்லாமல் செலவாகும் பணத்தை மிச்சப்படுத்தலாம்.  மேலும், பைக்கை தூசி, சேறு மற்றும் தண்ணீரிலிருந்து பாதுகாக்கவும்.  இல்லை என்றால் அதில் உள்ள இரும்பு சீக்கிரமே துருப்பிடித்து விடும்.  பைக்கை அடிக்கடி கழுவி லூப்ரிகேட் செய்யவும். மேலும் இரண்டு மட்டுமே செல்ல கூடிய பைக்கில் ஓவர்லோட் செய்யாதீர்கள். இது சில பாகங்களை சரிவர இயங்கவிடாமல் செய்யும்.  முடிந்தவரை சீரான வேகத்தில் பைக்கை ஓடினால் அதிக மைலேஜ் கிடைக்கும்.  ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் ஒரு முறை பைக்கை தவறாமல் சர்வீஸ் செய்வது நல்லது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.