கார் வாங்க போகிறீர்களா? இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்!

Car Buying Tips: புதிதாக கார் வாங்குவது என்பது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மக்களின் கனவு ஆகும். மேலும் சொந்தமாக கார் வாங்குவதற்கு நிறைய பணம் செலவாகும். வாங்கிய பின்பு அடிக்கடி பெரிய செலவுகள் இருக்கும்.  எனவே, உங்களுக்கு பிடித்த காரை வாங்கும் முன்பு நன்கு ஆராய்ச்சி செய்து வாங்குவது நல்லது. கார் வாங்கும் முன் சில விஷயங்களை மனதில் கொள்வது மிகவும் முக்கியம்.  காரின் பட்ஜெட் முதல் காரில் உள்ள சிறப்பம்சங்கள் வரை அனைத்தையும் தெரிந்து கொண்டு வாங்குவது நல்லது.

கார் வாங்கும் முன்பு அதனை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.  நீங்கள் விரும்பும் காரில் எத்தனை கலர்கள் உள்ளது, எத்தனை மாடல்கள் உள்ளது, அதன் பழைய மற்றும் புதிய விலை, தற்போது சந்தையில் உள்ள சலுகைகள் பற்றி முன்கூட்டியே தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள். இந்த தகவல்களை இணையதளம் மூலமும், மோட்டார் சம்பந்தமான பத்திரிகைகள் மற்றும் அந்த காரை ஏற்கனவே வாங்கியவர்கள் இடம் இருந்து தெரிந்து கொள்ளலாம்.  நீங்கள் எவ்வளவு விலையில் காரை வாங்க முடியும் என்பதை தெரிந்து கொண்டு உங்களது காரை தேர்வு செய்யுங்கள்.  காரின் விலை, அதன் மாடல், காப்பீடு மற்றும் பிற செலவுகள் ஆகியவற்றை தெரிந்து கொண்டு பட்ஜெட்டை முடிவு செய்யுங்கள்.  இதன் மூலம் தேவையில்லாமல் கூடுதலாக செலவு செய்வதை தடுக்க முடியும்.  

காரை எடுக்கும் முன்பு, அதற்கான டீலர்களிடம் பேசி முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.  ஒரே காருக்கு வெவ்வேறு டீலர்ஷிப்கள் இருப்பார்கள். அவர்களிடம் சலுகைகள் மற்றும் விலைகளை கேட்டு தெரிந்து கொண்டு ஒப்பிட்டு பாருங்கள். சிறந்த ஆபர்களை தெரிந்து கொண்டு, அந்த டீலர்களிடம் கார்களை வாங்குவது நல்லது.  உங்களுக்கு பிடித்த காரை வாங்கும் முன் டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கவும்.  குறிப்பாக நீங்கள் வாங்கப் போகும் மாடலை டெஸ்ட் டிரைவ் செய்து பார்ப்பது நல்லது.  டெஸ்ட் டிரைவ் செய்யும் போது, காரில் உள்ள அம்சங்கள், அதன் செயல்திறன், ஓட்டும் போது இருக்கும் வசதி ஆகியவற்றை நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.  

மேலும், உங்களிடம் பழைய கார் இருந்தால், டீலரிடம் எஸ்ச்ங்கே சலுகைகள் இருக்கிறதா என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.  இதன் மூலம் சிறந்த சலுகையை தேர்வு செய்ய முடியும்.  இவற்றைவிட முக்கிய விஷயம் என்னவென்றால், காரை கடனில் வாங்க திட்டமிட்டு இருந்தால் டீலர்ஷிப் வழங்கும் வட்டி விகிதங்கள், கடனை திருப்பி செலுத்தும் காலம் ஆகியவற்றை நன்கு தெரிந்து கொண்டு பிறகு முடிவெடுங்கள்.  சில கார்களுக்கு டீலர்கள் குறிப்பிட்ட ஆபர்களை வழங்கி வருகின்றனர்.  அதனை கேட்டு தெரிந்து கொண்டு உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.  டீலர்கள் ஆரம்பத்தில் கார்களுக்கு கூடுதல் விலைகளை சொல்ல வாய்ப்புள்ளது.  காரை பற்றி நன்கு தெரிந்தவர்களை உடன் அழைத்து செல்லுங்கள். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.