புனே: சூட்கேஸ் என்று நினைத்து வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்துச் சென்று ஏமாந்த திருடர்கள்!

புனே அருகில் உள்ள சஸ்வாட் தாலுகா அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு செய்முறை விளக்கம் கொடுப்பதற்காக வாக்கு பதிவு இயந்திரம் வைக்கப்பட்டு இருந்தது. மர்ம நபர்கள் இயந்திரம் இருந்த அறை பூட்டை உடைத்து உள்ளே சென்று ஒரு வாக்கு பதிவு இயந்திரத்தை இரவோடு இரவாக திருடிச் சென்று விட்டனர். மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் வாக்கு பதிவு இயந்திரம் திருட்டு போனது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது. இது குறித்து அதிகாரிகள் தலைமை தேர்தல் கமிஷனுக்கு தகவல் கொடுத்தனர். உடனே இச்சம்பவத்திற்கு காரணமாக மூன்று அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யும்படி மாநில தலைமை செயலாளருக்கு தலைமை தேர்தல் கமிஷன் கடிதம் எழுதி இருக்கிறது.

திருடர்கள்

இது குறித்து மாநில தேர்தல் அதிகாரி ஸ்ரீகாந்த் தேஷ்பாண்டே கூறுகையில், ‘ திருட்டு போன வாக்கு பதிவு இயந்திரம் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு கொடுக்க மட்டுமே பயன்படுத்தக்கூடியது. இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடமிருந்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து பொதுமக்களுக்கு வாக்கு இயந்திரத்தில் எப்படி வாக்களிக்கவேண்டும் என்பது குறித்து முகாம்கள் அமைத்து விளக்கமளித்து வருகிறோம்” என்றார்.

இயந்திரம் திருட்டு போனது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். கண்காணிப்பு கேமரா பதிவுகள் சோதனை செய்யப்பட்டது. இதில் மூன்று பேர் வாக்கு பதிவு இயந்திரத்தை திருடிச்சென்றது பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் சிவாஜி மற்றும் அசிங்கயா ஆகிய இரண்டு பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்றாவது நபர் தலைமறைவாக இருக்கிறார். இது குறித்து போலீஸ் அதிகாரி பங்கஜ் கூறுகையில்,” குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தியதில் வாக்குப்பதிவு இயந்திரத்தை சூட்கேஸ் என்று நினைத்து தூக்கிச்சென்று இருக்கின்றனர்.

வாக்குப்பதிவு இயந்திரம்

வெளியில் சென்று சோதித்து பார்த்தபோதுதான் அது எதற்கும் ஆகாது என்று கருதி என்ன செய்வது என்று தெரியாமல் போகிற வழியில் தூக்கிப்போட்டுவிட்டு சென்றுவிட்டனர். தோட்டத்தில் உள்ள ஒரு ஷெட்டில் இருந்து வாக்கு பதிவு இயந்திரம் மீட்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். திருட்டு போன அறையில் மொத்தம் 40 வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இயந்திரம் இருந்த அறை கதவு திறக்கப்பட்டு இருந்ததால் உள்ளே இருந்த இயந்திரங்களை எண்ணிப்பார்த்த போதுதான் ஒன்று காணாமல் போய் இருந்தது தெரிய வந்தது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.