பெரும் அழிவில் சீன மொபைல் துறை..! இந்தியா கொடுத்த பலத்த அடி

உலக மொபைல் சந்தை முழுவதையும் சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒரு காலம் இருந்தது. ஆனால், இந்தியா மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால், சீனா தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் SMIC நிறுவனமும் அதன் அறிக்கையும். இதை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.

உலக அளவில் மொபைல் போன் உற்பத்தி மற்றும் அதற்கான உதிரிபாகங்கள் தயாரிப்பு ஏற்றுமதியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால், இந்தியாவின் சில நடவடிக்கைகளால் சீனாவின் இந்த மார்க்கெட் இப்போது பெரும் பின்னடைவை சந்தித்து கொண்டிருக்கிறது. முதலில், மொபைல் தயாரிப்பு விவகாரத்தில் சீனாவுக்கு இந்தியா பலத்த அடி கொடுத்துள்ளது. இதேபோல், மொபைல் உதிரி பாகங்கள் விஷயத்திலும் சீனா நஷ்டத்தை சந்தித்து வருகிறது. எப்படியென்றால், ஒரு காலத்தில் இந்தியாவில் மொபைல் உற்பத்தி இருந்தது, அதற்கான பாகங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் இப்போது இந்தியா சீனாவிலிருந்து உதிரிபாகங்களை வாங்குவதை பெருமளவு கட்டுப்படுத்தியுள்ளது. சீனாவை விட வியட்நாம், அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து சிப்செட்களை பெற இந்தியா திட்டமிட்டுள்ளது. இது சீனாவின் மொபைல் மார்க்கெட்டில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சீன நிறுவனத்திற்கு பெரும் இழப்பு

இது மட்டுமின்றி, இந்திய அரசு பிஎல்ஐ திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிப்பதால், பல பெரிய சிப் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவிற்கு வர தொடங்கியுள்ளன. சமீபத்திய அறிக்கையின்படி, சீனாவின் மிகப்பெரிய சிப் தயாரிப்பு நிறுவனமான செமிகண்டக்டர் மேனுஃபேக்ச்சரிங் இன்டர்நேஷனல் கார்ப்பரேஷன் அதாவது SMIC பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. நான்காவது காலாண்டில் இந்நிறுவனம் 55 சதவீத இழப்பை சந்தித்துள்ளது. இதற்குக் காரணம் உலகளாவிய தேவை பலவீனமாக இருப்பதாக நம்பப்படுகிறது.

உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு

சீனாவின் SMIC பல வகையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறது. கடந்த ஆண்டு Huawei க்கு SMIC மூலம் உளவு தகவல்கள் தொடர்பான உதவி வழங்கப்படுவதாக ஒரு ஆய்வாளர் கூறியபோது, இந்த நிறுவனம் சர்ச்சையில் சிக்கியது. Huawei Mate 60 போனில் நிறுவப்பட்ட சீனாவில் மிகவும் சக்திவாய்ந்த சிப்பை உள்நாட்டிலேயே Huawei தயாரித்து, அது மற்ற நாடுகளுக்கு அனுப்பி உளவு பார்த்தாக குற்றம்சுமத்தப்பட்டது. அதாவது வாடிக்கையாளர்கள் பயன்படுத்தபடும் மொபைல் சிப்செட் சீனாவுக்கு தகவல்களை அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அமெரிக்கா உட்பட பல நாடுகள் Huawei -ஐ தடை செய்துள்ளன.

சிப்செட்களுக்கான தேவை குறைவு

கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு, உலகளவில் சிப்செட்களுக்கான தேவை குறைந்துள்ளது. சீனாவில் இருந்து சிப்செட் வாங்குவது ஒரு முக்கியமான பிரச்சினையாக உள்ளது. ஏனெனில் சீனாவில் சிப்செட் உற்பத்தி நீண்ட காலமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அண்மைகாலமாக சீனாவின் மொபைல் மார்க்கெட் பெரும் அடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதில் இருந்து மீள்வதற்கான சாத்தியக்கூறுகள் மிக குறைவு என்பதால், அந்நாட்டில் இருக்கும் பெரு நிறுவனங்கள்  இந்தியா உள்ளிட்ட நாடுகளை நோக்கி வரத் தொடங்கியுள்ளன. 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.