What to watch on Theatre & OTT: லால் சலாம், Lover, Premalu, Monster – இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

Lover (தமிழ் / தெலுங்கு)

Lover

பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன், ஸ்ரீ கௌரி பிரியா, கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Lover’. காதலில் வரும் பிரச்னைகளையும், உறவுச் சிக்கல்களையும் பற்றிப் பேசும் இப்படம் (இன்று) பிப்ரவரி 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

லால் சலாம் (தமிழ்)

லால் சலாம்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், தம்பி ராமையா, செந்தில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. இப்படத்தில் ரஜினிகாந்த், ‘மொய்தீன் பாய்’ எனும் கெளரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கிரிக்கெட் மூலம் மதநல்லிணக்கம் பற்றிப் பேசும் இத்திரைப்படம் (இன்று) பிப்ரவரி 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Yatra 2 (தெலுங்கு)

Yatra 2

ஆந்திராவின் முன்னாள் முதல்வர், மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கைக் கதையைத் தழுவி இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் ‘Yatra’. மஹி வி.ராகவ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியாக மம்மூட்டி நடித்துள்ளார். ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகனும், தற்போதைய ஆந்திரா முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் ஜீவா நடித்துள்ளார்.

அரசியல் திரில்லர் திரைப்படமான இதன் முதல் பாகம் 2019-ம் ஆண்டு வெளியான நிலையில் தற்போது இதன் இரண்டாம் (இன்று) பிப்ரவரி 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Eagle/Sahadev (தெலுங்கு/இந்தி)

Eagle (தெலுங்கு)

கார்த்திக் காட்டம்நேனி இயக்கத்தில் ரவி தேஜா, அனுபமா பரமேஸ்வரன், நவ்தீப் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Eagle’. (இந்தியில் ‘Sahadev’) ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது தெலுங்கு, இந்தி மொழிகளில் (இன்று) பிப்ரவரி 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிவுள்ளது.

Teri Baaton Mein Aisa Uljha Jiya (இந்தி)

Teri Baaton Mein Aisa Uljha Jiya

அமித் ஜோஷி, ஆராதனா ஷா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தி திரைப்படம் ‘Teri Baaton Mein Aisa Uljha Jiya’. ஷாஹித் கபூர், கிருத்தி சனோன், தர்மேந்திரா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். காமெடி, ரொமான்ஸ் கலந்த காதல் திரைப்படமான இது (இன்று) பிப்ரவரி 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Anweshippin Kandethum (மலையாளம்)

Anweshippin Kandethum

டார்வின் குரியகோஸ் இயக்கத்தில் டோவினோ தாமஸ், சித்திக், இந்திரன்ஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாள திரைப்படம் ‘Anweshippin Kandethum’. போலீஸ் க்ரைம் திரில்லர் திரைப்படமான இது (இன்று) பிப்ரவரி 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Premalu (மலையாளம்)

Premalu

கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் மீனாட்சி ரவீந்திரன், அல்தாஃப் சலீம், அகிலா பார்கவன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Premalu’. காதலில் எழும் சிக்கல்களைப் பற்றிய திரைப்படமான இது (இன்று) பிப்ரவரி 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

The Iron Claw (ஆங்கிலம்)

The Iron Claw

சீன் டர்கின் இயக்கத்தில் ஜாக் எஃப்ரான், ஜெர்மி ஆலன் வைட், ஹாரிஸ் டிக்கின்சன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘The Iron Claw’. 1980களில் மல்யுத்தத்தில் வரலாற்றை உருவாக்கிய பிரிக்க முடியாத வான் எரிச் சகோதரர்களின் உண்மைக் கதையை மையமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் திரைப்படமான இது (இன்று) பிப்ரவரி 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Monster (ஜாப்பனிஸ்)

Monster

Kore-eda Hirokazu இயக்கத்தில் Sakura Ando,Eita Nagayama, Soya Kurokawa உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Monster’. தன் குழந்தையின் வித்தியாசமான நடத்தைகளைக் கண்டு மிகுந்த வருத்தத்திற்குள்ளாகும் தாய், தனது குழந்தையின் உளவியலைப் புரிந்துகொள்வதுதான் இதன் கதைக்களம். குழந்தைகளின் உளவியலைப் பற்றிப் பேசும் இத்திரைப்படம் (இன்று) பிப்ரவரி 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த வார ஓ.டி.டி ரிலீஸ்கள்:

இப்படிக்கு காதல் (தமிழ்)

இப்படிக்கு காதல் (தமிழ்)

பாரத் மோகன் இயக்கத்தில் பரத், ஜனனி, சோனாக்ஷி சிங், பாண்டியராஜன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இப்படிக்கு காதல்’. இத்திரைப்படம் ‘Aha’ ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது.

Bhakshak (இந்தி) – Netflix

Bhakshak

புல்கிட் இயக்கத்தில் பூமி பெட்னேகர், சஞ்சய் மிஸ்ரா, ஆதித்ய ஸ்ரீவஸ்தவ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Bhakshak’. ஒரு கொடூரமான குற்றத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதற்காக நீதி கேட்டுப் போராடும் பெண்ணின் இடைவிடாதப் போராட்டாம்தான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் ‘Netflix’ ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.

Lantrani (இந்தி) – Zee5

Lantrani

கௌசிக் கங்குலி, பாஸ்கர் ஹசாரிகா, குர்விந்தர் சிங் ஆகியோர் இயக்கத்தில் ராஜேஷ் அவஸ்தி, போலோரம் தாஸ், ஜிதேந்திர குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Lantrani’. காமெடி நிறைந்த கிராமத்து மனிதர்களின் கதை சொல்லும் திரைப்படமான இது ‘Zee5’ ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.

Suncoast (ஆங்கிலம்) – Disney+ Hotstar

Suncoast

லாரா சின் இயக்கத்தில் நிகோ பார்க்கர், லாரா லின்னி, வூடி ஹாரல்சன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Suncoast’. முக்கியமான மருத்துவ வழக்கை எதிர்த்து தன் பெற்றோர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து போராடும் இளம்பெண்ணின் கதை இது. இத்திரைப்படம் ‘Disney + Hotstar’ ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த வார வெப்சீரிஸ்:

One Day (ஆங்கிலம்) – Netflix

One Day

மோலி மேனர்ஸ், லூக் ஸ்னெலின், ஜான் ஹார்ட்விக், கேட் ஹெவிட் ஆகியோர் இயக்கத்தில் லியோ வூடல், அம்பிகா மோட், ஆம்பர் கிராப்பி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘One Day’. காமெடி, ரொமான்ஸ் தொடரான இது ‘Netflix’ ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.

Jai Mahendran (மலையாளம்)

Jai Mahendran

ஸ்ரீகாந்த் மோகன் இயக்கத்தில் சைஜு குருப், சுஹாசினி, மியா ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Jai Mahendran’. லஞ்சம், ஊழலை காமெடியாக விமர்சிக்கும் இது ‘Sony Liv’ ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.

Aarya – Season 3 (இந்தி) – Disney+ Hostar

Aarya Season 3

ராம் மத்வானி, சந்தீப் மோடி ஆகியோரது ஆக்கத்தில் சுஷ்மிதா சென், அங்கூர் பாட்டியா, விகாஸ் குமார், சந்திரச்சூர் சிங் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி வெப்சீரிஸ் ‘Aarya’. ஆக்‌ஷன், திரில்லர் நிறைந்த இந்த வெப்சீரிஸின் மூன்றாவது சீசன் ‘Disney+ Hostar’ தளத்தில் வெளியாகியுள்ளது.

தியேட்டர் டு ஓ.டி.டி

கேப்டன் மில்லர் (தமிழ்) – Amazon Prime Video

கேப்டன் மில்லர்

தனுஷ், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் ஆகியோர் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. பீரியட் படமாக உருவாக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் நடித்திருக்கிறார். வெகுளிப் பையனாக இருந்து வெகுண்டு எழும் போராளியாக மாறும் தனுஷின் ஆக்‌ஷன், அதிரடி திரைப்படமான இது ‘Amazon Prime Video’ தளத்தில் வெளியாகியுள்ளது.

அயலான் (தமிழ்) – Sun NXT

Ayalaan | அயலான்

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிப்பில் ‘இன்று, நேற்று, நாளை’ ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அயலான்’. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சயின்ஸ் ஃபிக்ஷன் – பேன்டஸி திரைப்படமான இது ‘Sun NXT’ தளத்தில் வெளியாகியுள்ளது.

Guntur Kaaram (தெலுங்கு) – Netflix

Guntur Kaaram

நடிகர் மகேஷ் பாபு, ஶ்ரீலீலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குண்டூர் காரம்’. ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது ‘Netflix’ தளத்தில் வெளியாகியுள்ளது.

Bubblegum (தெலுங்கு) – Aha

Bubblegum

ரவிகாந்த் பெரேபு இயக்கத்தில் ரோஷன் கனகலா, மானசா சௌத்ரி, ஹர்ஷா செமுடு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு திரைப்படம் ‘Bubblegum’. ஆக்‌ஷன், ரொமான்டிக் திரைப்படமான இது ‘Aha’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Kaatera (கன்னடம்) – Zee5

Kaatera

தருண் சுதிர் இயக்கத்தில் தர்ஷன் தூகுதீப், ஸ்ருதி, வைஜநாத் பிரதர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Kaatera’. ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது ‘Zee5’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Palasher Biye (பெங்காலி) – Zee5

Palasher Biye

பிரேமேந்திர பிகாஷ் சாகி இயக்கத்தில் மிமி சக்ரவர்த்தி, சோம்ராஜ் மைதி நடிப்பில் உருவாகியுள்ள பெங்காலி திரைப்படம் ‘Palasher Biye’. இத்திரைப்படம் ‘Zee5’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Khichdi 2 (இந்தி) – Zee 5

Khichdi 2

ஆதிஷ் கபாடியா இயக்கத்தில் ரேயான்ஷ் வீர் சத்தா, அனங் தேசாய், பரேஷ் கணத்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Khichdi 2’. அட்வென்சர், காமெடி திரைப்படமான இது ‘Zee 5’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

The Underdoggs (ஆங்கிலம்) – Amazon Prime Video

The Underdoggs

சார்லஸ் ஸ்டோன் இயக்கத்தில் ஸ்னூப் டாக், டிகா சம்டர், மைக் எப்ஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘The Underdoggs’. காமெடி கலந்த ஸ்போர்ட்ஸ் திரில்லர் திரைப்படமான இது ‘Amazon Prime Video’ தளத்தில் வெளியாகியுள்ளது.

Puppy Love (ஆங்கிலம்) – Lionsgate Play

Puppy Love

நிக் ஃபேபியானோ, ரிச்சர்ட் ஆலன் ரீட் இயக்கத்தில் லூசி ஹேல், கிராண்ட் கஸ்டின், நோர் டேவிஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Puppy Love’. இத்திரைப்படம் ‘Lionsgate Play’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

The Passenger (ஆங்கிலம்) – Amazon Prime Video

The Passenger

கார்ட்டர் ஸ்மித் இயக்கத்தில் மேரா பெனாய்ட், ஜானி பெர்ச்டோல்ட், பெட்ஸி போரெகோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘The Passenger’. திரில்லர் திரைப்படமான இது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

The Marvels (ஆங்கிலம்) – Disney + Hotstar

The Marvels

‘கேப்டன் மார்வெல்’ படத்தின் சீக்குவலான ‘தி மார்வெல்ஸ்’ திரைப்படம் ‘Disney Hotstar’ ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.

இதில் ‘கேப்டன் மார்வெல்’ கரோல் டான்வர்ஸ், ‘மிஸ் மார்வெல்’ கமலா கான் மற்றும் மோனிகா ராம்பியூ ஆகிய மூன்று பெண் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களும் இடம்பெறுகின்றன. உலகைக் காக்கப் போராடும் அதிரடி, ஆக்‌ஷன் கலந்த இப்படத்தை நியா டகோஸ்டா இயக்கியுள்ளார்.

இதில் உங்களின் சாய்ஸ் என்னவென்பதை கமென்ட்டில் சொல்லுங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.