பெட்ரோல் பங்குகளில் இப்படிலாம் மோசடி நடக்கிறதா? கார் வைத்திருப்போர் ஜாக்கிரதை!

Petrol Pump Fraud: பெட்ரோல் பங்குகளில் பலவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது, இவை பல நாட்களாக நடைபெற்று வந்தாலும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெட்ரோல் பங்குகளில் நடக்கும் மோசடிகள் பற்றி சிலவற்றை நாம் தெரிந்து வைத்திருப்போம், ஆனால் நமக்கு தெரியாமலே பல விதங்களில் மோசடிகள் நடைபெறுகிறது. பெட்ரோல் பங்குகளில் நாம் பெட்ரோல் அல்லது டீசல் போடும் போது பல நேரங்களில் அதில் பூஜ்ஜியத்தை பார்க்காமல் விட்டு விடுகிறோம், அந்த சமயங்களில் நமது வாகனத்திற்கு குறைவான அளவு பெட்ரோலை அல்லது டீசலை ஊற்றிவிட்டு அதிக பணம் வாங்கிக் கொள்கின்றனர். 

பெட்ரோல் பங்கில் நீங்கள் 500 ரூபாய் கொடுத்து உங்கள் வாகனத்திற்கு பெட்ரோல் அல்லது டீசல் போட சொல்கிறீர்கள், ஆனால் பங்கில் உள்ள நபர் அங்குள்ள மீட்டரில் ஏற்கனவே 50 ரூபாய்க்கு ரீடிங் ஆகி இருக்கும் படி செட் செய்து இருப்பார்.  ஆனால் அதை நாம் சரியாக கவனித்திருக்க மாட்டோம், இந்த நேரத்தில் நமது வாகனத்திற்கு 500 ரூபாய்க்கு பெட்ரோல் அல்லது டீசல் போடப்படும். ஆனால் உண்மையில் 450 ரூபாய்க்கு மட்டுமே நமது வாகனத்தில் நிரப்பப்படும். நாமும் அந்த குறைந்த பெட்ரோலுக்கான மைலேஜை பெரிதாக பொருட்படுத்த மாட்டோம். 

இது போல மோசடிகளில் இருந்து தப்பிக்க பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் உள்ளது டீசல் போடும் போது, இயந்திரத்தில் நிலை பூஜ்யத்தில் இருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவேளை பூஜ்ஜியம் இல்லாமல் இருந்தால் பங்க் ஆப்ரேட்டரிடம் பூஜ்ஜியம் ஆக்கும் படி கூறுங்கள். மேலும் உங்கள் வாகனத்தில் போடப்பட்ட அளவு பெட்ரோல் இருக்கிறதா என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் வாகனத்தில் குறிப்பிட்ட அளவு பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பப்படவில்லை என்பதை நீங்கள் உணர்ந்தால் உடனடியாக பங்கு உரிமையாளரிடம் இது குறித்து புகாரை தெரிவியுங்கள்.

இருப்பினும், இது தவிர பெட்ரோல் பங்குகளில் வேறு விதங்களிலும் மோசடிகள் நடைபெறுகிறது. உங்கள் வாகனத்தில் பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பும் போது, அங்குள்ள ​இயந்திரத்தின் ரீடிங் பூஜ்ஜியத்தில் இருந்து நேராக ரூ.10, 15 அல்லது 20 ஆக மாறுவதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். இதிலும் சில பங்குகளில் மோசடி நடக்கிறது.  நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்கள் என்பதை உணர்ந்தால் உடனடியாக பெட்ரோல் பங்க் நிர்வாகத்திடம் புகார் செய்யுங்கள்.

பெட்ரோல் பங்கில் உள்ள புகார் செய்யும் புத்தகத்தை கேட்டு வாங்கி உங்கள் புகாரை பதிவு செய்யலாம். ஒவ்வொரு எண்ணெய் நிறுவனங்களும் ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் வாடிக்கையாளர்கள் புகாரை பதிவு செய்வதற்கான புத்தகத்தை வழங்குகின்றன, அவை தணிக்கை மற்றும் ஆய்வுகளின் போது மதிப்பாய்வு செய்கின்றன. பெட்ரோல் பங்க் உதவியாளர் அல்லது உரிமையாளர்/மேலாளர் புகார் செய்ய வேண்டாம் என்று உங்களை வலியுறுத்தலாம். உங்களுக்கு மோசடி நடைபெறுகிறது என்று தெரிந்தால் உங்கள் புகாரை யார் சொல்வதையும் கேட்கலாம் பதிவு செய்யுங்கள்.  மேலும், எண்ணெய் நிறுவனங்களின் இணையதளம் மூலம் ஆன்லைனில் புகார் அளிக்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.