Balis $10 Tourism Tax For Foreigners Comes Into Effect: Heres What To Know | பாலி தீவிற்கு சுற்றுலா செல்ல வரி விதிக்கும் இந்தோனேஷியா அரசு: காரணம் என்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஜகார்த்தா: இந்தோனேஷியாவின் பாலி தீவிற்கு சுற்றுலா செல்பவர்கள், 10 அமெரிக்க டாலர் சுற்றுலா வரி கட்ட வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இந்தோனேஷியாவிற்கு சுற்றுலா செல்பவர்கள் அதிகம் செல்லும் இடமாக பாலி தீவு முக்கிய இடம் பெறும். ஆஸ்திரேலியர்களால் அதிகம் விரும்பப்படும் இடமாக இத்தீவு உள்ளது. கடந்த ஆண்டு மட்டும், அந்நாட்டை சேர்ந்த ஒரு லட்சம் பேர் இங்கு வந்துள்ளனர். இதற்கு அடுத்த இடங்களில், இந்தியா, சிங்கப்பூர், சீனாவைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.

இந்நிலையில், இந்த தீவுக்கு சுற்றுலா வருபவர்கள் 10 டாலர் சுற்றுலா வரி கட்ட வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அத்தீவின் கலாசாரம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இந்த வரி விதிக்கப்படுவதாக அரசு விளக்கம் அளித்து உள்ளது.

இந்த வரி கட்டுவதில் இருந்து உள்நாட்டு சுற்றுலா பயணிகள், ஆசியான் நாட்டை சேர்ந்தவர்கள், தூதரக விசா பெற்றவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற நாட்டினர் ஆன்லைன் வாயிலாக அல்லது பாலி தீவு வந்ததும் விமான நிலையத்தில் வரி கட்ட வேண்டும் எனக்கூறியுள்ளது. கடந்த ஆண்டு இது அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று முதல் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.