ஏஐ தொழில்நுட்பத்தில் உருவான புகைப்படங்களை கண்டுபிடிப்பது எப்படி?

சமீப காலங்களில், AI ஆல் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் பல்வேறு டிஜிட்டல் தளங்களில் தவறான தகவல் மற்றும் பிரச்சாரத்தை பரப்புவதற்கு ஒரு முக்கிய ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மக்கள் போலி செய்திகளுக்கு இரையாகும் சூழல் உருவாகியுள்ளது. அண்மையில் ராஷ்மிகா மந்தனா குறித்து வெளிவந்த வீடியோ எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், இது ஏஐ ஆல் உருவாக்கப்பட்ட வீடியோ என்பதை உண்மை வீடியோவை வெளியிட்டு, மெய்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனையடுத்து தான் ஏஐ மூலம் வீடியோ மற்றும் புகைப்படம் உருவாக்குவதால் ஏற்படும் அபாயம் குறித்த புரிதல் எல்லோருக்கும் ஏற்பட தொடங்கியது.

ஏஐ மூலம் யார் ஒருவரையும் தவறாக சித்தரித்து புகைப்படம் மற்றும் வீடியோ உருவாக்கிவிட முடியும். இது மிகமிக ஆப்பதான போக்கு என்றாலும், மக்கள் ஏஐ தொழில்நுட்பம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே ஏஐ மூலம் உருவாக்கப்படும் புகைப்படங்களை எப்படி அடையாளம் காண்பது என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம். 

GAN படங்கள் என்றால் என்ன?

அச்சு அசலாக நிஜத்தை பிரதிபலிக்கும் வகையில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை உருவாக்குவதற்கு பயன்படும் தொழில்நுட்பத்தின் பெயர் ஜெனரேட்டிவ் அட்வர்சரியல் நெட்வொர்க்குகள் (GANs). இந்த கான்செப்ட் கம்ப்யூட்டர் வல்லுநர்களால் 2014 ஆம் ஆண்டு மாண்ட்ரீல் பல்கலைக்கழகத்தில் இருக்கும் பேராசிரியர்களால் உருவாக்கப்பட்டது.  ஆரம்பத்தில் நிஜத்தைப் போன்ற புகைப்படங்கள் உருவாக்குவதில் ஒரு வரையறையுடன் இந்த தொழில்நுட்பம் செயல்பட்ட நிலையில் இதில் மேற்கொள்ளப்பட்ட அடுத்தடுத்த அப்டேட்டுகள் நம்ப முடியாத வகையிலான முடிவுகளை கொடுத்தது. ஒருவரை அச்சுஅசலாக, எதார்த்தமாக இருப்பதுபோல புகைப்படங்களை இந்த தொழில்நுட்பங்களால் உருவாக்கிவிட முடியும். அதற்கான ஆற்றல் GAN -இடம் இருக்கிறது.  

AI-உருவாக்கப்பட்ட படங்களை எவ்வாறு கண்டறிவது? 

ஒரு புகைப்படம் ஏஐ ஆல் உருவாக்கப்பட்டதா என்பதை கண்டறிவதற்கு நீங்கள் படத்தை படங்களை பெரிதாக்கி (Zoom), கவனமாக அனைத்து அம்சங்களையும் உன்னிப்பாக கவனிக்கும்போது வடிவங்கள் மற்றும் இயற்கைக்கு மாறான சமச்சீர் அம்சங்கள் போன்ற முரண்பாடுகளை பார்க்க முடியும். உடல் பாகங்கள் மற்றும் முக அம்சங்கள், ஏதேனும் அடையாளங்கள், உடல் விகிதாச்சாரங்கள் ஆகியவற்றில் மாறுபாடுகள் இருக்கும். இயற்கையான அம்சங்களுக்கு மாறாக இருக்கும். 

புகைப்படங்களின் மூலத்தை சரிபார்த்தல்

கூகுள் லென்ஸ், பிங் அல்லது டைனி போன்ற கருவிகளைப் பயன்படுத்தி, ஒரு புகைப்படத்தின் தன்மையை கண்டறிந்து கொள்ளலாம். ஏஐ உருவாக்கிய புகைப்படங்களை இந்த கருவிகள் காண்பித்து கொடுத்துவிடும். மெட்டோ டேட்டாவை சரிபார்த்தால் ஏறக்குறைய புகைப்படத்தின் உண்மை தன்மை தெரிந்துவிடும். பெரும்பாலும் AI-உருவாக்கிய படங்கள் பெரும்பாலும் பின்னணியில் மங்கலாக இருக்கும். Hive AI என்ற கருவி வழியாகவும் ஏஐ உருவாக்கிய புகைப்படங்களை கண்டுபிடிக்க முடியும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.