There is no clean water in the hostel and 15 students are infected | விடுதியில் சுத்தமான தண்ணீர் இல்லை 15 மாணவர்களுக்கு நோய் தொற்று

தங்கவயல் : தங்கவயல் சாமிநாதபுரம் பகுதியில் உள்ள மாணவர் விடுதியில், மாணவர்களுக்கு சுத்தமான தண்ணீர் வழங்கப்படாததால் மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

தங்கவயல், சாமிநாத புரம் பகுதியில் கர்நாடக அரசின், சமூக நலத்துறைக்கு உட்பட்ட மாணவர் விடுதிஉள்ளது.இங்கு ஸ்கூல் ஆப் மைன்ஸ், தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள்,அரசுக் கல்லுாரிகளின் மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

இங்கு 60 மாணவர்கள் உள்ளனர். அனைவருமே வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.இங்கு சுத்தமான தண்ணீர் வசதி இல்லை.

தண்ணீர் சேமித்து வைத்துள்ளதொட்டி பாசி படிந்துள்ளது. கண்ணுக்கு தெரியாத கிருமிகள், பூச்சிகள் உள்ளன. இந்த நீரை பயன்படுத்தியதால், 15 மாணவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கை, கால் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டு, அவை வெடித்துரணமாக உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் விடுப்பில் அவரவர் வீடுகளுக்குசென்று, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து மாணவர் லோகேஷ் கூறுகையில், ”எங்களுக்கு குடிக்க சுத்தமான குடிநீர் வழங்குவதில்லை. குளிக்க வெந்நீர் தருவதில்லை. காலையில் சிற்றுண்டி 9:30 மணிக்கு தருகின்றனர்.

”ஆனால் எங்களின் கல்லூரி வகுப்புகள் 9:30 மணிக்கு துவங்குகிறது. இதனால்தினமும் வகுப்புகளுக்கு உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் போகிறது. இது குறித்து வார்டனிடம் கூறியும் பிரயோஜனம் இல்லை,” என்றார்.

ஹர்ஷா என்ற மாணவர் கூறுகையில், ”கழிப்பறை வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே சுத்தப்படுத்துகின்றனர். இதனால், துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு உள்ளது,” என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.