நமது வீட்டில் உள்ள பிரிஜ்ட்ஜை சுத்தம் செய்வது எப்படி? எளிதான வழிகள் இதோ!

How to Clean Refrigerator: தற்போது குளிர்சாதன பெட்டி என்பது அனைவரது வீட்டிலும் முக்கியமான ஒரு பொருளாக மாறியுள்ளது.  உணவுகளை கெட்டுப்போகாமல் புத்துணர்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க இது உதவுகிறது.  உணவுப் பொருட்கள் குளிர்சாதனப் பெட்டியில் நீண்ட நாட்கள் புதியதாக இருக்கும். நீங்கள் அவற்றை வெளியே எடுத்து பின்னர் சாப்பிடலாம். ஆனால், தினசரி பயன்படுத்தப்படும் இந்த குளிர்சாதன பெட்டியில் அழுக்கு, உணவு துண்டுகள் மற்றும் கறைகள் குவிய அதிக வாய்ப்புள்ளது. குளிர்சாதனப்பெட்டியில் சேரும் அழுக்கு உணவுப் பொருட்களைக் கேட்டு போக வைப்பது மட்டுமல்லாமல், அதிக மின்சாரத்தையும் எடுத்துக்கொள்ளும். எனவே குளிர்சாதன பெட்டியை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம்.

நமது வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியை சுத்தமாக வைக்கவில்லை என்றால், அதில் வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் எளிதில் கெட்டுப்போக வாய்ப்புள்ளது. இதனால் உடல் நலத்திற்கு கேடுகளும் ஏற்படும்.  வீட்டில் உள்ள குளிர்சாதனப்பெட்டியை எப்படி சுத்தம் செய்வது என்று தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. இதன் மூலம் நீங்களே உங்களின் குளிர்சாதனப்பெட்டியை சுத்தம் செய்து கொள்ளலாம், மேலும் சர்வீஸ் செய்வதற்கான பணத்தையும் மிச்சப்படுத்தலாம். குளிர்சாதன பெட்டியை எப்படி சுத்தம் செய்வது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.  

குளிர்சாதன பெட்டியை சுத்தம் செய்வது எப்படி?

– குளிர்சாதனப் பெட்டியை சுத்தம் செய்வதற்கு முன், அதை மின்சாரத்தில் இருந்து அகற்றி வைக்க வேண்டும். இதன் மூலம் உங்களுக்கும் அல்லது குளிர்சாதன பெட்டிக்கும் எந்த வித தீங்கும் ஏற்படாது. இதற்குப் பிறகு, குளிர்சாதன பெட்டியின் உள்ளே அனைத்து உணவு பொருட்களையும் வெளியேற்றவும். இது சுத்தம் செய்வதை எளிதாக மாற்றும்.  பிறகு குளிர்சாதன பெட்டியில் ஏதேனும் அழுக்கு படிந்து இருந்தால், அதனை சுத்தம் செய்யவும். குளிர்சாதன பெட்டியை சுத்தம் செய்ய வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் பேக்கிங் சோடா போன்றவற்றை பயன்படுத்தலாம்.

– குளிர்சாதனப் பெட்டியின் உட்புறம் மற்றும் வெளிப்புற மேற்பரப்பை வெதுவெதுப்பான நீர் மற்றும் பேக்கிங் சோடா கரைசலைக் கொண்டு சுத்தம் செய்தால் புதிது போன்று பளபளப்பாக மாறும். மேலும் குளிர்சாதன பெட்டியின் உட்புறத்தை சுத்தம் செய்ய மென்மையான துணி அல்லது கடற்பாசி போன்றவற்றை பயன்படுத்தலாம்.

– குளிர்சாதன பெட்டியில் உள்ள தட்டு மற்றும் ரேக்கை தனியாக கழட்டி நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.  அதில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய எலுமிச்சையை பயன்படுத்தலாம். எலுமிச்சம்பழத்தை இரண்டாக வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் உள்ள அழுக்குகளில் தேய்க்கவும். எலுமிச்சை குளிர்சாதன பெட்டியில் உள்ள துர்நாற்றத்தை அகற்ற உதவுகிறது.  நன்றாக துடைத்த பிறகு மீண்டும் பயன்படுத்தலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.