IND vs ENG: யார் இந்த சோயிப் பஷீர்? இந்தியாவை திணறடித்த பாகிஸ்தானியர்!

India vs England 4th Test: பொதுவாகவே இந்திய அணி அதன் சொந்த மண்ணில் எப்போதும் ஆதிக்கம் செலுத்தும். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் இந்திய அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள்.  ஆனால் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவை தலைகீழாக மாறி உள்ளது.  இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-2 என்ற நிலையில் உள்ளது.  தற்போது நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியில் வெற்றியை பெற வாய்ப்புள்ளது.  3வது டெஸ்ட் போட்டியில் கிட்டத்தட்ட 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று இருந்தது. இந்நிலையில் 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளது.

இங்கிலாந்து அணியில் இருந்து ஜாக் லீச் வெளியேறியதால், ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லி மற்றும் சோயப் பஷீர் ஆகிய இளம் சுழற்பந்து வீச்சாளர்களுடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.  ஆனாலும் இந்திய பேட்ஸ்மேன்கள் இவர்களது சுழலில் வீழ்ந்துள்ளனர். சுழல் இந்த மூன்று பேரும் இந்த தொடரில் இதுவரை 37 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இது இந்திய அணியின் அனுபவமிக்க வீரர்களான ஆர் அஷ்வின், குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் கூட்டு விக்கெட்களை விட அதிகம்.  நான்காவது டெஸ்டின் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 219-7 என்ற நிலையில் தடுமாறி வருகிறது. ஜோ ரூடின் அபாரமான சதத்துடன் இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் 353 ரன்களை குவித்தது. தற்போது இந்திய அணி 134 ரன்கள் பின்னிலையில் உள்ளது.  

யார் இந்த சோயிப் பஷீர்?

20 வயதான சுழற்பந்து வீச்சாளர் சோயப் பஷீர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த டெஸ்டில் இங்கிலாந்தின் கைகளை ஓங்க செய்துள்ளார்.  பஷீர் 31 ஓவர்கள் வீசி 84-4 என்று சிறப்பாக பந்து வீசி உள்ளார்.  2013 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக கிரேம் ஸ்வான் 32 ஓவர்கள் வீசி 90 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதற்கு பிறகு ஒரு இங்கிலாந்து பந்துவீச்சாளர் பந்து வீசிய நீண்ட ஸ்பெல் இதுவாகும். இளம் வீரரான சோயிப் பஷீர் தற்போது இந்திய அணிக்கு ஒரு அச்சுறுத்தலாக மாறி உள்ளார். இங்கிலாந்து அணியில் பஷீர் இடம் பெற்றதே ஒரு ஆச்சர்யம் தான். காரணம் அவரை தேசிய அணியில் இடம் பெரும் போது அவர் வெறும் ஆறு முதல் தர போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தார். இருப்பினும், அவரது 6’4 அங்குல உயரம் அவருக்கு வாய்ப்பை பெற்று தந்தது.  

Shoaib Bashir got a guard of honour from his teammates when walking off the field #INDvENG pic.twitter.com/uwuAqJAxjZ

— Cricket on TNT Sports (@cricketontnt) February 24, 2024

கேப்டன் பென் ஸ்டோக்ஸ், மூத்த வீரர் அலஸ்டர் குக், பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லத்தின் ஆதரவிற்கு பிறகு அவர் இங்கிலாந்து அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். விசா பிரச்சனை காரணமாக பஷீர் ஹைதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் விளையாட முடியாமல் போனது.  சோயிப் பஷீர் இங்கிலாந்தில் உள்ள சர்ரேயில் பிறந்தாலும், அவரது பெற்றோர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். இதன் காரணமாக பஷீர் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு சில பார்மாலிட்டிக்காக மீண்டும் இங்கிலாந்து செல்ல நேர்ந்தது.  ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக மாறி உள்ளது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.