Ranji Trophy: மும்பையை சமாளிக்குமா தமிழ்நாடு… நேரலையை எங்கு, எப்போது பார்ப்பது?

Ranji Trophy, Mumbai vs Tamil Nadu: கிரிக்கெட் ரசிகர்களிடம் சென்று உங்களுக்கு டி20, ஓடிஐ போட்டிகள் பிடிக்குமா அல்லது டெஸ்ட் போட்டிகள் அதிகம் பிடிக்குமா என்று கேட்டால், நிச்சயம் பெரும்பாலானோர் டெஸ்ட் போட்டிகள் பக்கம்தான் சாய்வார்கள். டெஸ்ட் கிரிக்கெட் என்பதுதான் ஒரு வீரரிடம் இருந்தும், ஒட்டுமொத்த அணியிடம் இருந்தும் முழு திறனை வெளியே கொண்டுவரும் எனலாம். ஐந்து நாள்கள் நடக்கும் இந்த போர் யார் பக்கம் எப்போது செல்லும் என்பதை கணிக்கவே முடியாது. 

குறிப்பாக, இந்த மூன்று பார்மட்களில் கடினமானதும் டெஸ்ட் போட்டிதான். எனவேதான், வீரர்கள் டெஸ்ட் விளையாடுவதை மிகவும் புனிதமான ஒன்றாக குறிப்பிடுவார்கள். அந்த வகையில், இந்திய முதல்தர கிரிக்கெட்டில், ரஞ்சி டிராபி என்பது மிக உச்சபட்சமான தொடராகும். இந்தியாவின் பல்வேறு மாநில அணிகள் இந்த தொடரில் வருடாவருடம் விளையாடும்.

அந்த வகையில் இந்தாண்டு ரஞ்சி டிராபி தொடரில் லீக் சுற்று போட்டிகள் நிறைவடைந்து தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, விதர்பா, பரோடா, மத்திய பிரதேசம், மும்பை, சௌராஷ்டிரா ஆகிய 8 அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றன. இதில் தமிழ்நாடு, மும்பை, மத்திய பிரதேசம், விதர்பா ஆகிய அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளன.

அரையிறுதிச் சுற்று போட்டிகள் நாளை முதல் (மார்ச் 2) நடைபெற்று வருகிறது. மார்ச் 6ஆம் தேதி இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் தமிழ்நாடு – மும்பை அணிகளும், மத்திய பிரதேசம், விதர்பா அணிகளும் மோதுகின்றன. அந்த வகையில்,  தமிழ்நாடு – மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி மிகவும் முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது

மும்பையில் நாளை தொடங்கும் போட்டியில் டாஸ் வெல்லும் அணிக்குதான் அதிக சாதகம் இருக்கும். மேலும், சொந்த மண்ணில் நடப்பதால் மும்பை அணிக்கு கூடுதல் சாதகம் உள்ளது. தமிழ்நாடு சுமார் 36 ஆண்டுகளுக்கு முன்னர் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது, அதன்பின் பலமுறை இறுதிப்போட்டிக்கு வந்தும் தமிழ்நாடு கோட்டைவிட்டது குறிப்பிடத்தக்கது.

மும்பை அணியில் ரஹானே, பிருத்வி ஷா, முஷீர் கான், ஷிவம் தூபே, ஷர்துல் தாக்கூர், தேஷ்பாண்டே என பலமிக்கதாக தோற்றமளிக்கிறது. பரோடா அணிக்கு எதிராக 10ஆவது, 11ஆவது பேட்டர்கள் சதம் அடித்தது பெரிதும் வியந்து பார்க்கப்பட்டது. 

அதேபோல் தமிழ்நாடு அணியில் பாபா இந்திரஜித், விஜய் சங்கர், நாராயணன் ஜெகதீஷன், பிரதோஷ் ரஞ்சன் பால், அஜித் ராம் உள்ளிட்டோர் உள்ளனர். குறிப்பாக வாஷிங்டன் சுந்தரும் இந்திய அணியில் இருந்து தற்போது தமிழ்நாடு அணியில் இணைந்துள்ளது சாதகம் ஆகும். 

தமிழ்நாடு – மும்பை அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி தொலைக்காட்சியிலும், ஓடிடி தளத்திலும் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது. மும்பை சரத் பவார் கிரிக்கெட் அகாடமி BKC மைதானத்தில் நாளை 9.30 மணிக்கு தொடங்கும். தொலைக்காட்சியில் ஸ்போர்ட்ஸ் 18 சேனலிலும், Jio Cinemas தளத்திலும் நேரலையில் இலவசமாக காணலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.