விருதுநகர் வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல 5 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாதம் அதாவது வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 20-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 5 நாட்கள் […]