மோட்டார் வாகன போக்குவரத்து அலுவலகத்தின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக தானியங்கிப் பொறிமுறை மற்றும் இணையத்தளம்

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்தப்படுவதற்கான இறுதிக்கட்டத்தில் காணப்படுவதாகவும், அதற்கிணங்க மார்ச் நான்காம் திகதி முதல் நாடு பூராகவும் உள்ள மோட்டார் வாகானப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு வருகை தரும் சகல சேவை பெருநர்களுக்கு வினைத்திறனான உடனடி சேவைகளை வழங்குவதற்காக முன்கூட்டியே தினமும் நேரமும் பெறக்கூடியதாக தானியங்கி அழைப்புப் பொறிமுறையொன்று மற்றும் இணையத்தளம் என்பவற்றை அறிமுகப்படுத்துவதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன நடவடிக்கை எடுத்துள்ளதாக (29) அறிவித்தார்.

இதன் ஊடாக சேவை வளங்களின் போது இடம்பெறும் அசாதாரணங்களை குறைத்தல் மற்றும் வினைத் திறனான சேவையை பெறுநர்களுக்கு வழங்குதல் போன்ற விடயங்களை இலக்காகக் கொண்டுள்ளதுடன் கடந்த கொரோனா தொற்று காலத்தில் இம்முறை நடைமுறைப்படுத்தப்பட்டு தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

உலகம் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மற்றும் அபிவிருத்தி அடையும் காலத்தில் அரச நிறுவனங்களை டிஜிட்டல் மையப்படுத்தும் தேவைப்பாடு மற்றும் அதன் ஊடாக மிகவும் வினைத்திறனான அரச சேவை மக்களுக்கு வழங்குவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

அதற்கிணங்க, 011-2117116 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைப்பதனால் கொழும்பு மாவட்டத்தில் உள்ள சேவை வீரகர அல்லது நாராயன்பட்டியவில் அமைந்துள்ள அலுவலகங்களிலிருந்து தமக்கான சேவைகளை பெற்றுக் கொள்வதற்கு தினம் மற்றும் நேரத்தை பெற்றுக்கொள்ளலாம்.

கொழும்பு மாவட்டத்திற்கு வெளியில் உள்ள பயனாளிகள் தாம் வசிக்கும் மாவட்டத்தில் அமைந்துள்ள அலுவலகங்களில் சேவை பெற்றுக் கொள்வதற்கு அந்த மாவட்டங்களுக்கான குறியீட்டு இலக்கத்துடன் 2117116 என்ற இலக்கத்தை அழுத்துவதன் ஊடாக (உதாரணமாக கம்பஹா மாவட்ட பயனாளிகளுக்கு கம்பஹா மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து அலுவலகத்தில் தமக்கான தினத்தை ஒதுக்கி கொள்வதாயின் அதற்கான தொலைபேசி இலக்கம் 033-2117116) தமக்கான தினத்தை ஒதுக்கி கொள்ளலாம் என்றும் இதன் போது மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த் அணுருத்த தெளிவு படுத்தினார்.

அத்துடன், https://dmtappointments.dmt.gov.lk என்ற இணையதளத்தின் ஊடாக தமக்கான சேவையைப் பெற்றுக் கொள்வதற்கான தினம் மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொள்ளலாம்.

இதன் போது போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபன், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் துஷார சுரவீர, தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் தலைவர் தரிசன அபே ரத்ன உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.