ஜனவரியில் அதிகம் விற்பனையானது இந்த பைக்கா? ஆச்சரியத்தில் மோட்டார்துறை!

Most Saled Bikes in January 2024: இந்தியாவில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலரது அவசர தேவைக்கு உதவிகரமாக இருந்த பைக்குகள் குறைந்த விலையில் கிடைப்பதால் மக்கள் விரும்பி வாங்குகின்றனர்.  இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள பைக்குகள் என்றால் அவை 125சிசி தான். ஏன் என்றால் இந்த மாடல் பைக்குகளில் அதிக மைலேஜ் கிடைப்பது தான் காரணம். அதே போல ஒவ்வொரு ஆண்டும் அதிகம் விற்பனை ஆகும் பைக்குகள் பிரிவில் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்நிலையில், ​​கடந்த ஜனவரி 2024 மாதத்தில் 125சிசி பிரிவில் பைக்குகளின் விற்பனையின் தரவு வெளியாகி உள்ளது.  

இதில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக, பல்சர் போன்ற பிரபல மாடல்களை பின்னுக்கு தள்ளி ஹோண்டா சிபி ஷைன் 125சிசி செக்மென்ட் விற்பனையில் முதலிடத்தை பிடித்துள்ளது.  ஹோண்டா சிபி ஷைன் பைக் லிட்டருக்கு 64.6 கிமீ மைலேஜை தருகிறது. இதனால் பலரும் இதனை விரும்பி வாங்குகின்றனர்.  கடந்த மாதம் அதாவது ஜனவரியில் மொத்தம் 1,22,829 ஹோண்டா ஷைன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அடிப்படையில் கணக்கிட்டு பார்த்தால் 22.98 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது ஹோண்டா சிபி ஷைன். கடந்த ஆண்டு ஜனவரியில் மொத்தம் 99,878 ஹோண்டா ஷைன் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இரண்டாவது இடத்தில் பஜாஜின் பல்சர்

125சிசி பைக்குகள் பிரிவில் பஜாஜ் பல்சர் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த மாதம் மொத்தமாக 71,990 பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதேசமயம், 2023 ஜனவரியில் மொத்தம் 49,527 பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பஜாஜ் பல்சர் பைக் கடந்த ஆண்டின் விற்பனையை ஒப்பிட்டு பார்க்கும் போது, கிட்டத்தட்ட 45.36 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்த இரண்டு பைக்குகளை தொடர்ந்து டிவிஎஸ் ரைடர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. ஜனவரி 2024ல் மொத்தம் 43,331 யூனிட்கள் டிவிஎஸ் ரைடரில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதேசமயம், 2023 ஆம் ஆண்டில், இந்த பைக்கின் விற்பனை எண்ணிக்கை வெறும் 27,233 ஆக மட்டுமே இருந்தது. இத்தகைய சூழ்நிலையில், டிவிஎஸ் ரைடர் பைக் இந்த ஆண்டு 59.11 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

வெறும் 230 யூனிட் விற்பனையான கேடிஎம்

125சிசி பிரிவு பைக்குகள் விற்பனையில் நான்காவது இடத்தில் ஹீரோ கிளாமர் உள்ளது.  மொத்தம் 15,494 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.  கடந்த 2023ல் 9,766 யூனிட்கள் மட்டுமே இந்த மாடலில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதன் மூலம் இந்த பைக்கின் விற்பனை 58.65 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் ஹீரோ ஸ்பிளெண்டர் உள்ளது.  ஹீரோ பைக்குகள் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, இது ஆண்டு 13.04 சதவீதம் சரிவை பதிவு செய்துள்ளது. கடந்த மாதம், இந்த பைக் 13,870 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் KTM பைக் ஆறாவது இடத்தில் உள்ளது, இதில் 230 யூனிட்கள் கடந்த மாதம் விற்பனை செய்யப்பட்டன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.