பசங்களுக்கு Maths வராதா… இந்த ஆப் மூலம் ஈஸியா தெரிஞ்சிக்கலாம் – இப்போவே பாருங்க!

Google Photomath App: ஒவ்வொருக்கும் தங்களின் சிறுவயதில் இருந்து சில விஷயங்கள் வரவே வராது எனலாம். இன்னும் பல பேருக்கு சைக்கிள் ஓட்ட வராது. அவர்கள் பெரிய நிறுவனத்தில் பெரிய பதவியில் இருப்பவர்களாக கூட இருக்கலாம். இருந்தாலும் அவர்களுக்கு சைக்கிள் ஓட்டவோ, பைக் ஓட்டவோ வராது. இதைதான் சுட்டுப்போட்டாலும் எனக்கு இது வராது என பலரும் சொல்வதை கேட்டிருப்போம். 

அதேபோல்தான், படிக்கும் காலத்தில் எனக்கு Maths வரவே வராது என பலரும் சொல்வதை கேட்டிருப்பீர்கள். அவர்களுக்கு மற்ற பாடங்களில் நல்ல ஆர்வம் இருக்கும், ஆனால் கணக்குப் பாடத்தில் மட்டும் எப்போதும் சுணக்கம் காட்டுவார்கள், தேர்விலும் சொற்ப மதிப்பெண்களையே பெற்றிருப்பார்கள். அத்தகைய சற்று வளர்ந்த பிறகு, தனக்கு கணக்கு சொல்லிக்கூட யாராவது இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் யோசிப்பார்கள். 

அந்த வகையில், கூகுள் சமீபத்தில் அறிமுகப்படுத்தி உள்ள செயலி மூலம் ஒருவர் எளிதாக கணக்கு பாடங்களை எளிதாக கற்றுக்கொள்ளவும் முடியும், எளிதாக கணக்கிற்கு பதிலையும் பெற முடியும். அதாவது எவ்வளவு கடினமாக கணக்கு சார்ந்த கேள்வியாக இருந்தாலும், சில நொடிக்குள் உங்களுக்கு இந்த செயலி பதிலை தெரிவித்துவிடும். இது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமின்றி கடினமான சில கணக்குகளை பார்க்க வேண்டியவர்கள் கூட இந்த செயலியை பயன்படுத்தி, நொடிகளுக்குள் பதிலை பெறலாம்.

கூகுள் அறிமுகப்படுத்திய அந்த செயலியின் பெயர்  Photomath செயலியாகும். இந்த புத்தம்புதிய செயலி, ஸ்மார்ட் கேமரா கால்குலேட்டராகவும், மிக மிக கடினமான மற்றும் சிக்கலான சமன்பாடுகளை எளிதாக தீர்க்கும் உங்களின் கணக்கு பிள்ளையாகவும் கூட இந்த செயலி செயலாற்றும் என்பதை மறக்க வேண்டும். 

Photomath செயலி முதன்முதலில் கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் அறிமுகமானது. குறிப்பாக, எளிதாக கணக்கு சார்ந்த கேள்விகளுக்கு தீர்வு காணும் செயலி என்பதால் பலருக்கும் இதன் மீது பெரும் ஆர்வம் ஏற்பட்டது. சில ஒழுங்குமுறை அனுமதிகள் கிடைத்த பின்னர், கூகுள் நிறுவனம் Photomath செயலியை கடந்தாண்டு மார்ச் மாதம் வாங்கியது. தற்போது அதில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு கூகுள் அறிமுகப்படுத்தி உள்ளது. 

உலகம் முழுவதும் உள்ள அனைத்து ஸ்மார்ட்போன் பயனர்களும் இந்த Photomath செயலியை பயன்படுத்தலாம். Photomath செயலியை நீங்கள் தரவிறக்கம் செய்ய கூகுளின் பிளே ஸ்டோருக்கு சென்று, அதனை பெறலாம். இந்த செயலியின் எளிமையான பயன்பாட்டுமுறை, கணிதத்தில் பல வகைமைகளில் கேள்விகளை கேட்க உங்களை அனுமதிக்கும். அதாவது, புள்ளியியல் (Statistics), கால்குலஸ் (Calculus), முக்கோணவியல் (Trignomentry), இயற்கணிதம் (Algebra), வடிவியல் (Geometry) சார்ந்த கேள்விகளுக்கும் நீங்கள் எளிதாக விடை காணலாம். 

இந்த செயலியை பயன்படுத்துவதும் எளிதுதான். உங்கள் கணக்கு சார்ந்த கேள்வியை கையில்வைத்துக்கொண்டு அதனை கேமராவில் புகைப்படமாக எடுக்கவும். அதன்பின், Photomath செயலியை அந்த கணக்கை தீர்க்க உங்களுக்கு படிப்படியான வழிமுறையை தரும். வெறும் கணக்கின் தீர்வு மட்டுமின்றி அதுகுறித்து முழு புரிதலையும் இந்த செயலி உங்களுக்கு ஏற்படுத்தும். இதில் கட்டணம் செலுத்தி பிரீமியம் வகையிலும், இலவசமாகவும் கூட இந்த செயலியை பயன்படுத்த முடியும்.

மேலும் படிக்க | திடீரென நீக்கப்பட்ட செயலிகள்… தற்போது மீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில்… முழு பின்னணி என்ன?
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.