1 வருஷத்தில் இத்தனை தோசைகள் டெலிவரியா… அதுவும் தமிழர் தான் சாம்பியனா – ருசிகர தகவல்கள்

World Dosa Day, Swiggy: உணவுகளை பலரும் பசிக்கு சாப்பிடுவார்கள், சிலரோ அதன் ருசிக்கு சாப்பிடுவார்கள். தற்போதைய நவீன உலகில் வீட்டுச் சாப்பாட்டை தாண்டி பல்வேறு நாடுகளின் உணவுகளை ஒவ்வொரு வேளைக்கும் ருசி பார்க்கும் அளவிற்கு வளர்ச்சி வந்துவிட்டது எனலாம். சைனீஸ் உணவு, அமெரிக்க உணவு, ஜப்பானிய உணவு, கொரிய உணவு, மெக்சிகன் உணவு, இத்தாலிய உணவு என பல நாட்டு உணவுகளை நீங்கள் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களிலேயே ருசி பார்க்கலாம்.

ஓராண்டில் எத்தனை புள்ளிவிவரங்கள்…

இதனை நீங்கள் ஹோட்டலில் மட்டுமின்றி, ஹோட்டலில் ஆன்லைன் மூலம் ஆர்டர் கொடுத்து வீட்டிலேயே நீங்கள் அதனை சாப்பிடலாம். அதற்கு, Swiggy, Zomato போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி செயலிகள் பெரிதும் உதவுகின்றன. தங்களுக்கு தேவையான உணவுகளை, தங்களுக்கேற்ற நேரத்தில் ஆர்டர் போட்ட சாப்பிடுவதற்கு Swiggy, Zomato செயிலியைதான் இளைஞர்கள் முதல் அனைத்து தரப்பினரும் பயன்படுத்துகின்றனர். 

அந்த வகையில், Swiggy, Zomato போன்ற செயலிகளில் அதிகளவு ஆர்டர் செய்யும் போக்கு வளர்ந்துவிட்டது. இந்நிலையில், உலக தோசை தினமான (World Dosa Day) இன்று தாங்கள் கடந்த ஓராண்டில் டெலிவரி செய்த தோசை குறித்து புள்ளிவிவரங்களை Swiggy நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது, கடந்தாண்டு பிப். 25ஆம் தேதி முதல் இந்தாண்டு பிப். 25ஆம் தேதி வரை Swiggy நிறுவனத்தின் தோசையின் டெலிவரி குறித்த புள்ளிவிவரங்களை அந்நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

ஒரு நிமிஷத்தில் இத்தனை டெலிவரியா…

குறிப்பிட்ட இந்த ஓராண்டு காலகட்டத்தில் மட்டும் சுமார் 2.9 கோடி தோசைகள் டெலிவரி செய்யப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு நிமிடத்திற்கு122 தோசைகள் டெலிவரி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, ஹைதராபாத், சென்னை போன்ற நகரங்களில்தான் அதிக டெலிவரிகள் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

தோசையின் தலைநகரமாக பெங்களூரு உருவெடுத்துள்ளது. பெங்களூரு தோசை டெலிவரியில் பல முன்னணி நகரங்களை பின்னுக்குத் தள்ளியுள்ளது. அதாவது, டெல்லி, மும்பை, கொல்கத்தாவின் தோசை டெலிவரிகளை ஒன்று சேர்த்தால் கூட, அதைவிட இரு மடங்கு பெங்களூருவில் தோசை டெலிவரி செய்யப்பட்டிருப்பதாக Swiggy தெரிவிக்கிறது. ரொட்டிகளுக்கு மட்டுமின்றி மசாலா தோசையும் சண்டிகரில் அதிக டெலிவரியை பெற்றுள்ளது. ராஞ்சி, கோயம்புத்தூர், புனே, போபால் ஆகிய நகரங்களிலும் தோசை அதகிளவில் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் நபர்தான் சாம்பியன்

குறிப்பா, கோயம்புத்தூரை சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 447 தோசைகளை ஆர்டர் செய்திருப்பதாக Swiggy தெரிவத்தது. மேலும், கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல், ஓடிஐ உலகக் கோப்பை தொடர், ரமலான் பண்டிகை, நவராத்திரி பண்டிகை காலகட்டங்களில் தோசைகள் அதிகம் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. 

தோசைகள் அதிகளவில் காலையில்தான் ஆர்டர் செய்யப்பட்டிருக்கிறது. இரவில் என்றால் சென்னையிலேயே அதிகளவு தோசை ஆர்டர் செய்யப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் மசாலா தோசையே அதிக மவுஸை பெற்றிருக்கிறது. அதுமட்டுமின்றி, சாதா தோசை, செட் தோசை, ஆனியன் தோசை, பட்டர் மசாலா தோசை ஆகியவையும் அதிகம் ஆர்டர் செய்யப்பட்டிருக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.