Tata Motors Demerger: இரண்டாக பிரியும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்.. அதானி போர்ட்ஸ் பங்கு உச்சம்!

இரண்டாகப் பிரியும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்..

Tata Motors Demerger: டாடா குழுமத்தை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கார்கள், எலெக்ட்ரிக் கார்கள் போன்ற பயணிகள் வாகனங்கள், பஸ், லாரி போன்ற வர்த்தக வாகனங்கள் உள்ளிட்ட பலவகையான வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது.

இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பயணிகள் வாகனத் தொழிலையும் (PV), வர்த்தக வாகனத் தொழிலையும் (CV) தனித்தனி நிறுவனங்களாக பிரிப்பதற்கும், அவற்றை தனித்தனியாக பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Tata Motors Demerger

இதில் பயணிகள் வாகன நிறுவனத்தின் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்கள், ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover) ஆகிய தொழில்கள் வரும். வர்த்தக வாகனங்கள் தொழில் மற்றொரு தனி நிறுவனமாக பிரிக்கப்படும்.

இந்தப் பிரிப்புக்குப்பின், டாடா மோட்டார்ஸ் பங்குதாரர்கள் அனைவருக்கும் இரு நிறுவனங்களிலும் சரிசமமான பங்கு இருக்கும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனினும், இந்த பிரிப்புக்கான ஒப்புதல்களைப் பெறுவதற்கு சுமார் 12 – 15 மாதங்கள் ஆகும் எனவும் டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. தற்போது இதற்கான முதற்கட்ட ஒப்புதலை டாடா மோட்டார்ஸ் நிர்வாகக் குழு இன்று வழங்கியுள்ளது.

இன்ஷூரன்ஸ் நிறுவனப் பங்குகள் உயர்வு..

மார்ச் 4-ம் தேதி LIC, General Insurance Corporation, HDFC Life Insurancd, Max Financial Services போன்ற இன்ஷூரன்ஸ் துறை பங்குகள் ஏற்றம் கண்டிருக்கின்றன.

எல்.ஐ.சி

இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கான சரண்டர் மதிப்பில் (surrender value) திருத்தம் கொண்டுவருவதற்கு காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ (IRDAI) பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சரண்டர் மதிப்பு என்பது, ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசி மெச்சூரிட்டிக்கு முன்பாகவே நிறுத்தப்படும்போது பயனாளிக்கு செலுத்தப்படும் தொகையாகும்.

இந்தத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து மார்ச் 4-ம் தேதி வர்த்தகத்தில் இன்ஷூரன்ஸ் துறை பங்குகள் உயர்ந்துள்ளன.

அதானி போர்ட்ஸ் பங்கு புதிய உச்சம்..

அதானி போர்ட்ஸ் நிறுவனம் (Adani Ports) பல்வேறு துறைமுகங்களை நிர்வகித்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் அதானி போர்ட்ஸ் நிறுவனம் கையாண்ட சரக்குகளின் அளவுக்கு 33 சதவிகிதம் உயர்ந்து 35.4 மில்லியன் மெட்ரிக் டன்னாக உள்ளது.

adani ports – அதானி போர்ட்ஸ்

குறிப்பாக, தம்ரா துறைமுகம் கையாண்ட சரக்குகள் மட்டும் 4.22 மில்லியன் மெட்ரிக் டன்னாக உள்ளது. பிப்ரவரி வரையிலான 11 மாதங்களில் அதானி போர்ட்ஸ் நிறுவனம் 382 மில்லியன் மெட்ரிக் டன்னாக உள்ளது.

இதைத் தொடர்ந்து அதானி போர்ட்ஸ் பங்குகளை வாங்கலாம் என தரகு நிறுவனமான மோதிலால் ஆஸ்வால் பரிந்துரைத்துள்ளது. இலக்கு விலையாக 1410 ரூபாய் நிர்ணயித்துள்ளது. இதனால் மார்ச் 4-ம் தேதி அதானி போர்ட்ஸ் பங்கு 1 சதவிகிதம் மேல் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

தரகு நிறுவனம் பரிந்துரைக்கும் பங்கு…

கல்ஃப் ஆயில் லூப்ரிகன்ட்ஸ் (Gulf Oil Lubricants) பங்குகளை வாங்கலாம் என பங்குத் தரகு நிறுவனமான ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டிஸ் (ICICI Securities) பரிந்துரைத்துள்ளது.

கல்ஃப் ஆயில் நிறுவனம் பெட்ரோலியம் லூப்ரிகன்ட் பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்தத் துறையில் இரண்டாவது மிகப்பெரிய தனியார் நிறுவனமாக இருக்கும் கல்ஃப் ஆயில் நிறுவனத்துக்கு 7-8 சதவிகித சந்தைப் பங்கு இருக்கிறது.

Gulf Oil

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த நிறுவனம் 17.6 சதவிகித CAGR விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. எனவே, கல்ஃப் ஆயில் பங்குகளை வாங்கலாம் என பரிந்துரைத்துள்ள ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டிஸ் நிறுவனம், இலக்கு விலையாக 1250 ரூபாய் நிர்ணயித்துள்ளது. இதைத்தொடர்ந்து மார்ச் 4-ம் தேதி கல்ஃப் ஆயில் பங்கு விலை 7 சதவிகிதம் மேல் உயர்ந்துள்ளது.

பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் பங்கு புதிய உச்சம்…

பொதுத் துறை நிறுவனமான பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் (BHEL) நிறுவனப் பங்கு மார்ச் 4-ம் தேதி ஒரே நாளில் சுமார் 17 சதவிகிதம் உயர்ந்து 276 ரூபாய் என்னும் புதிய 52 வார உச்சத்தை தொட்டுள்ளது.

BHEL | பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்

என்.டி.பி.சி நிறுவனம் சிங்ராலி அனல்மின் நிலையத்தின் மூன்றாம் கட்ட நிலையத்தை அமைக்க 17,195.3 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது.

இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்கான ஏலத்தில் பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் நிறுவனம் மட்டுமே போட்டியிட்டுள்ளது. இதனால் இதன் பங்கு விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டில் மட்டுமே இதுவரை பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் பங்கு 36.68 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters

Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed.

General Disclaimer and Terms & Conditions of the research report

INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.

One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration)

முதலீடு செய்வதற்குமுன், செபி பதிவு பெற்ற இன்வெஸ்ட்மென்ட் அட்வைசரிடம் கலந்தாலோசிக்க முதலீட்டு முடிவை எடுக்க வேண்டும். சரியான வாய்ப்புகளுக்காகக் காத்திருந்து அந்த வாய்ப்புகள் கிடைக்கும்போது குறைந்த எண்ணிக்கையில் வாங்குவது லாபகரமாக இருக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.