உலகம் முழுவதும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை 30 நிமிடங்களாக பாதிப்பு

புதுடெல்லி,

உலகம் முழுவதும் சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் வலைதளம் ( முன்பு டுவிட்டர்), வாட்ஸ்அப் போன்றவற்றை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இவற்றில், தங்களுடைய புகைப்படங்கள், வீடியோக்கள் உள்பட பல்வேறு தகவல்களையும் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்த கூடிய பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் சேவை இன்றிரவு 8.30 மணியளவில் பாதிக்கப்பட்டது. ஏறக்குறைய 30 நிமிடங்களுக்கும் கூடுதலாக இவற்றின் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.

அவற்றின் செயலிகள் செயல்படவில்லை. இதனால், தகவல் தொடர்பு கிடைக்காத சூழலில், மக்கள் பரிதவித்து வருகின்றனர். இணையவசதிகள் கிடைக்காமல் மக்கள் அவதியடைந்து உள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.