சன்னி லியோன், தனுஜ் விர்வானி தொகுத்து வழங்கும் எம்டிவியின் ‛ஸ்பிலிட்ஸ் வில்லா சீசன் 15' தமிழில் ஒளிபரப்பாகிறது

எம்டிவி.,யின் பிரபல நிகழ்ச்சி ஸ்பிலிட்ஸ் வில்லா (Splits villa). ரியாலிட்டி ஷோவான இது ஏற்கனவே 14 சீசன்களை கடந்த நிலையில் இப்போது 15வது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் மற்றும் நடிகர் தனுஜ் விர்வானி ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர். இந்த சீசனின் கருப்பொருளை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கையில் இதுதொடர்பான புரொமோ வீடியோ வெளியாகி உள்ளது. இது இந்த நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கியுள்ளது.

சன்னி லியோனும் தனது சமூகவலைதளத்தில் இந்த புரொமோ பாடலைப் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களிடமிருந்து வரவேற்பை பெற்றுள்ளது. சன்னி மற்றும் தனுஜ் ஆகியோரின் முதல் காட்சி வெளியானதில் இருந்தே, தொகுப்பாளர்களாக இருக்கும் இவர்களின் நட்புறவு உற்சாகமான நிகழ்ச்சியை எவ்வாறு சேர்க்கும் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

மார்ச் 30ம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் இரவு 7 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. எம்டிவி மற்றும் ஜியோ சினிமாஸில் இதை காணலாம். தமிழிலும் இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.