புதிய நிறங்களில் கேடிஎம் RC390, RC200, RC125 விற்பனைக்கு அறிமுகமானது

ஃபேரிங் ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் கேடிஎம் ஆர்சி வரிசையில் உள்ள RC390, RC200, மற்றும் RC125 மாடல்களில் 2024 ஆம் ஆண்டிற்கு புதிய நிறங்களை பெற்று எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளது.

  • 2024 கேடிஎம் RC பைக்குகளின் விலையில் மாற்றமில்லை.
  • என்ஜின் உட்பட எந்த மெக்கானிக்கல் மாற்றங்களும் இல்லை
  • மூன்று மாடல்களுமே ஏரோடைனமிக்ஸ் பின்பற்றி ஃபேரிங் செய்யப்படவை

சில வாரங்களுக்கு முன்பாக ஆர்சி பைக்குகளின் புதிய நிறங்கள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தொடர்ந்து தற்பொழுது இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டிற்கான கேடிஎம் RC 390 பைக் மாடலில் 373சிசி லிக்விட்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின் 42.9bhp மற்றும் 37Nm டார்க்கினை வழங்கி 6 வேக கியர்பாக்ஸ், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் க்விக் ஷிஃப்டருடன் இணைக்கப்பட்டு புதிதாக ஆரஞ்ச் நிறத்துடன் நீல நிறமும் மற்றும் கருப்பு நிறத்துடன் ஆரஞ்ச் வண்ணத்தை கொண்டுள்ளது.

2024 கேடிஎம் RC 200 பைக் மாடலில் முழுமையான கருப்பு நிறம் மற்றும் நீல நிறத்துடன் பல்வேறு இடங்களில் ஆரஞ்ச் பெற்றுள்ளது. இந்த மாடலில் 25 hp பவரை வெளிப்படுத்தும் 199cc எஞ்சின் பொருத்தப்பட்டு 19.2 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

2024 கேடிஎம் RC125 மாடலில் 14.34bhp மற்றும் 12Nm பவர் வெளிப்படுத்தும் 124.7cc ஒற்றை சிலிண்டர் என்ஜின் லிக்யூடு கூல்டு என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது. இந்த மாடலில் கருப்பு நிறத்துடன் ஆரஞ்ச் மற்றும் நீல நிறத்துடன் ஆரஞ்ச் என இரு நிறங்களை கொண்டுள்ளது.

2024 KTM RC 390 – ₹ 3,18,173

2024 KTM RC 200 – ₹ 2,17,696

2024 KTM RC 125 – ₹ 1,89,542

கூடுதலாக கேடிஎம் 250 அட்வென்ச்சர் மற்றும் 390 அட்வென்ச்சர் பைக்குகளும் புதிய நிறத்தை பெற்று விலையில் எந்த மாற்றங்களும் இல்லை.

2024 ktm 250 adv

The post புதிய நிறங்களில் கேடிஎம் RC390, RC200, RC125 விற்பனைக்கு அறிமுகமானது appeared first on Automobile Tamilan.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.