Illegal sand sale: Collectors file review petition against Supreme Court order | சட்டவிரோத மணல் விற்பனை: உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து கலெக்டர்கள் சீராய்வு மனு தாக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து மாவட்ட கலெக்டர்கள் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தின் சில மாவட்டங்களில் நடந்த சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு அந்த மாவட்டங்களின் கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறை விசாரணைக்கு கலெக்டர்கள் ஆஜராக தேவையில்லை என உயர்நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், கலெக்டர்கள் ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக கலெக்டர்கள் தரப்பில் இன்று (மார்ச் 6) சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நேரில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவை மறு பரிசீலனை செய்யக் கோரி மாவட்ட கலெக்டர்கள் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.