தமிழக பெண்ணின் பாதம் தொட்டு வணங்கிய பிரதமர் மோடி

டெல்லியில் சிறந்த கதை சொல்லிபிரிவுக்கான விருது பெறுவதற்காக தமிழ்நாட்டை சேர்ந்தகீர்த்திகா கோவிந்தசாமி மேடைஏறியதும் பிரதமர் மோடியின் பாதத்தை தொட்டு வணங்கினார். அப்போது பிரதமர் மோடி, காலில் விழக்கூடாது என்றுஅறிவுறுத்தினார். அதேநேரம் கீர்த்திகாவின் பாதத்தை அவர் 3 முறை தொட்டு வணங்கினார். பின்னர் விழா மேடையில் இருவரின் உரையாடல் விவரம்:

பிரதமர் மோடி: நாட்டில் பாதங்களை தொட்டு வணங்குவது பாரம்பரியாக இருக்கிறது. கலைத் துறையில் ஒருவர் காலில் விழும்போது, அதன் உணர்வு வேறுபட்டதாக இருக்கும். ஒரு மகள் (கீர்த்திகா கோவிந்தசாமி) என் பாதம் தொட்டு வணங்கும்போது எனது மனம் பாதிப்படையும்.

கீர்த்திகா : மிக்க நன்றி ஐயா.

பிரதமர் மோடி: நீங்கள் பேசுவதை கேட்க விரும்புகிறேன்.

கீர்த்திகா: என்னை மன்னிக்க வேண்டுகிறேன். நான் இந்தியை புரிந்து கொள்வேன். ஆனால் இந்தியில் சரளமாக பேச முடியாது.

பிரதமர் மோடி: உங்களுக்கு விருப்பமான மொழியிலேயே பேசுங்கள். இந்த நாடு மிகப் பெரியது. ஏதோ ஓர் இடத்தில் நீங்கள் பேசுவதை கேட்பவர் இருப்பார்.

கீர்த்திகா: எல்லோருக்கும் வணக்கம். பல மேடைகளில் தமிழை பெருமைப்படுத்திய பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் மோடி: ‘வணக்கம்’ என்று தமிழில் கூறி எனது உரையைத் தொடங்குவேன்.

நீங்கள் வரலாற்றில் இருந்துஒரு பகுதியை எடுத்து பேசுகிறீர்கள். நீங்கள் பணியாற்றுவது சவாலான ஒரு களம். உங்கள் உணர்வு எப்படி இருக்கிறது.

கீர்த்திகா: வரலாறும் அரசியலும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை. இது கொஞ்சம் சவாலான பணிதான். பலர் எதிர்மறையாக விமர்சிக்கின்றனர்.

பிரதமர் மோடி: இளம் தலைமுறையினர்தான் செல்போனில்அதிக நேரத்தை செலவிடுகின்றனர். இளம் தலைமுறையினரின் விருப்பம் என்னவாக இருக்கிறது?

கீர்த்திகா: எனது பார்வையாளர்களில் பலர் இளம் தலைமுறையினர். இந்தியாவின் வரலாறு, பெருமைகளை எடுத்துக் கூறும்கதைகளை விரும்புகின்றனர்.

பிரதமர் மோடி: உங்கள் கதைகளால் இளம் தலைமுறையினருக்கு நன்மைகள் கிடைக்கும். நீங்கள் நாட்டுக்கு மிகப்பெரிய சேவை செய்கிறீர்கள். நன்றி. வாழ்த்துகள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.