குற்ற வழக்குகளில் சரண் அடைபவர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களிலேயே சரண் அடைய வேண்டும்: சுற்றறிக்கை பிறப்பிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகளில் சரணடைபவர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களிலேயே சரணடைய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்காட்டாங்கொளத்தூரைச் சேர்ந்ததிமுக நிர்வாகியான ஆராமுதன் நாட்டு வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

இந்நிலையில், இவர்கள் 5பேரும் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தது செல்லாது என அறிவித்து அதை ரத்து செய்ய ேண்டும் எனக் கோரியும், இனி கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களிலேயே சரண் அடைய உத்தரவிட வேண்டும் என நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா முறையீடு செய்து மனுவையும் தாக்கல் செய்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துசென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவரான ஜி.மோகனகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார்.

வழிகாட்டி நெறிமுறைகள்: இந்நிலையில், கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகளில் சரண் அடைவது தொடர்பாக சில வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்து நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகளில் சரண் அடைபவர்கள் சம்பந்தப்பட்ட ஆளுகைக்குட்பட்ட நீதிமன்றத்திலேயே சரணடைய வேண்டும். அவர்கள் வேறு நீதிமன்றங்களில் சரணடைந்தால் அதுசெல்லாது. அதேபோல சரணடைவது தொடர்பாக வேறு குற்றவியல்நடுவர் முன்பாக தாக்கல் செய்யப்படும் மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல. இதை மீறி யாரேனும் சரணடைந்தால் அவர்களை சிறையில் அடைக்கும்படி அந்த நீதிமன்றம் உத்தரவிட முடியாது.

மேலும், போலீஸாரால் தேடப்படுபவர்கள் வேறு நீதிமன்றங்களில் சரணடைந்தால் அந்த குற்றவியல் நடுவர் அதுதொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து அவர்களை காவலில் எடுக்க உத்தரவிடலாம். இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் பதியப்படும் குற்ற வழக்குகளுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும்.

இந்த உத்தரவை தலைமை நீதிபதியின் அனுமதி பெற்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ளஅனைத்து கீழமை நீதிமன்றங் களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும் என உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் குற்ற வழக்குகளில் சரண் அடைபவர்களுக்கு சட்ட ரீதியாக எந்தவொரு பாதுகாப்பும் இருக்காது என்பதால் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஜி. மோகனகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.