பெண்கள் பிரீமியர் லீக்; மும்பை அணிக்கு எதிராக குஜராத் பேட்டிங் தேர்வு

புதுடெல்லி,

2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்குள் நுழையும்.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் பெத் மூனி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

குஜராத் அணி:

லாரா வோல்வார்ட், பெத் மூனி , போப் லிட்ச்பீல்ட், பார்தி புல்மாலி, டி ஹேமலதா, ஆஷ்லே கார்ட்னர், கேத்ரின் பிரைஸ், சினே ராணா, தனுஜா கன்வார், மேக்னா சிங், ஷப்னம்.

மும்பை அணி:

யாஸ்திகா பாட்டியா , ஹெய்லி மேத்யூஸ், நாட் ஸ்கிவர்-பிரண்ட், ஹர்மன்பிரீத் கவுர் , அமெலியா கெர், அமன்ஜோத் கவுர், எஸ் சஜானா, பூஜா வஸ்த்ரகர், ஹுமைரா காசி, ஷப்னிம் இஸ்மாயில், சைகா இஷாக்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.