Blasphemy video released: Pak, Gil youth sentenced to death | மதத்தை இழிவுப்படுத்தி வீடியோ வெளியீடு: பாக்., கில் இளைஞருக்கு மரண தண்டனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

இஸ்லாமாபாத்: இஸ்லாம் மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டதற்காக பாகிஸ்தானில் 22 வயது இளைஞருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இஸ்லாமிய மதம் குறித்து அவதூறு பரப்பினால் மரண தண்டனை விதிக்கும் வகையிலான சட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த 22 வயது இளைஞர் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வாட்ஸ் அப்பில் பகிர்ந்துள்ளார். அதை 17 வயது சிறுவன் ஒருவனும் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

2022ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் 22 வயது இளைஞர், 17 வயது சிறுவன் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 22 வயது இளைஞருக்கு மரண தண்டனையும், 17 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.