ஜியோ, ஏர்டெல்லுக்கு கும்பிடு போடுங்க..! 5ஜி போன்கள் விலை குறையபோகுது

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களால் இந்தியாவில் 5ஜி மொபைல்களின் விலை மிக மிக மலிவாக இருக்கப்போகிறது. ஏனென்றால், இந்தியாவில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தான் 5G நெட்வொர்க் கொடுக்கும் மிகப்பெரிய நிறுவனங்கள். இரண்டு நிறுவனங்களும் 5ஜி நெட்வொர்க்குகளில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளன. அதனால், 5ஜி நெட்வொர்க்குகளில் வரும் மொபைல்கள் எல்லாம் மலிவு விலையில் வந்தால் மட்டுமே 5ஜி நெட்வொர்க் பயன்பாடு அதிகரிக்கும் என்பதால், மொபைல் நிறுவனங்களை 5ஜி மொபைல்களை குறைவான விலைக்கு, அதாவது 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் புதிய மொபைல்கள் அறிமுகப்படுத்துமாறு கேட்டுக் கொண்டிருக்கின்றன.

இப்போது, ஏர்டெல் மற்றும் ஜியோ இரண்டும் ஸ்மார்ட்போன் நிறுவனங்களுடன் இணைந்து டேட்டா சலுகைகளை வழங்குகின்றன. அதற்காக ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை Poco, OnePlus, Vivo மற்றும் Oppo, Realme மற்றும் Apple போன்ற ஸ்மார்ட்போன் பிராண்டுகளுடன் கூட்டு சேர்ந்துள்ளன. இதனால் டேட்டா மற்றும் OTT செயலிகளின் சந்தாவை ஸ்மார்ட்போனுடன் மலிவாக வழங்க முடியும். இந்தியாவில் 5ஜியின் பலன்கள் பெரிய அளவில் மக்களை சென்று சேர வேண்டுமானால், 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலையை ரூ.10,000க்கும் குறைவாகக் குறைக்க வேண்டும் என்று மார்க்கெட் நிபுணர்களும் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

ஏர்டெல் சமீபத்தில் Poco உடன் இணைந்து 5G ஸ்மார்ட்போன்களின் விலையை ரூ.8,799க்கு அறிமுகப்படுத்தியது. டேட்டா பண்ட்லிங் மூலம் அறிமுகமான இந்த 5G ஸ்மார்ட்போன் மூலம் வாடிக்கையாளரின் டேட்டா நுகர்வு அதிகரிக்கும். தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் ஒரு பயனருக்கு சராசரி வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிராமங்களுக்கு 5ஜி அணுகலை வழங்கவும் ஏர்டெல் நிறுவனம் அதன் ஸ்டோர்களை அதிகரித்துக் கொண்டிருக்கறது. இதன் காரணமாக இனி வரும் காலங்களில் இந்தியாவில் 5ஜி மொபைல்களின் விலை மிக மிக குறைவாக இருக்கும் என உறுதியாக சொல்லலாம்.

இப்போது இந்தியா முழுவதும் 70க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களில் 5ஜி நெட்வொர்க் கிடைக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, கொல்கத்தா, புனே, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கும் முக்கிய நகரங்களிலும் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி நெட்வொர்க்கை கொடுக்கத் தொடங்கியுள்ளனர். உங்களிடம் 5ஜி மொபைல் இருந்தால் இந்த நிறுவனங்களின் 5ஜி நெட்வொர்க்கை எளிதாக அணுகலாம். 4ஜி ஸ்பீடை விட டபுள் மடங்காக 5ஜி நெட்வொர்க்கின் ஸ்பீடு இருக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.