Vijayapura tiger threatening father-son | தந்தை – மகனை அச்சுறுத்தும் விஜயபுரா புலி

அரசியலில் யாரும் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லைன்னு சொல்லுவாங்க. அது யாருக்கு பொருந்துதோ இல்லயோ… கர்நாடகா அரசியல்வாதிகளுக்கு நல்லா பொருந்தும்.

இன்னைக்கு சண்டை போடுறவங்க நாளைக்கு ஒண்ணா சேர்ந்து சுத்துவாங்க… ‘என்ன மச்சான் கோவிச்சிகிட்டியா…. நா சும்மா சண்டை போட்டேன்… லுலுலாய்’ என்று சொல்லிப்பாங்க.

ஒரு காலத்துல முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும், விஜயபுரா புலியான பா.ஜ., – எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னாலும், அவ்வளவு குளோசா இருந்தாங்க.

எடியூரப்பாவை யாராவது, ஏதாவது சொல்லிட்டா போதும்… அவ்வளவு தான் வேட்டிய மடிச்சு கட்டிட்டு, சண்டைக்கு கெளம்பிருவாரு நம்ம எத்னாலு.

காலா படத்துல ரஜினி பேசுற டயலாக் மாதிரி… ‘வேங்கை மகன்… ஒத்தையில நிக்கேன்… தில்லிருந்தா மொத்தமா வாங்கலே’ என்பது மாதிரி எதிர்த்து நிப்பாரு எத்னாலு.

சிங்கம் படத்துல விஜயகுமாரு, சூர்யாவ பார்த்து பேசுற டயலாக் போல… ‘எங்கய்யா இருந்த இவ்வளவு நாளா… உன்ன மாதிரி ஒருத்தன தான்யா தேடிட்டு இருந்தேன்’னு… எத்னால நினைச்சு பெருமைப்பட்டுட்டு இருந்தாரு எடியூரப்பா.

யாரு கண்ணு பட்டுச்சோ தெரியல. இப்போ இரண்டு பேரும் எலியும், பூனையும் மாதிரி ஆயிட்டாங்க.

எடியூரப்பா முதல்வரா இருந்தப்ப, எத்னாலு தொகுதிக்கு கொடுத்த 105 கோடி ரூபாய திரும்ப வாங்கினாரு. டென்ஷன் ஆயிட்டாரு எத்னாலு. அங்க ஆரம்பிச்சுது இரண்டு பேருக்கும் மோதல். ‘நீயா, நானான்னு பார்த்துருவோம்’னு இரண்டு பேரும் மல்லுக்கட்டு ஆரம்பிச்சாங்க.

‘என்னோட தொகுதிக்கு ஒதுக்குன காசயா திரும்ப எடுத்துகிட்ட. இப்போ வைக்குறேன் பாரு உனக்கு ஆப்பு’ன்னு, மேலிடத்துக்கு குடைச்சல் கொடுத்து, எடியூரப்பாவை முதல்வர் நாற்காலியில இருந்து இறக்குனாரு, எத்னால்.

அதுக்கு அப்புறம், தனக்கு முதல்வர் பதவி எதிர்பார்த்தாரு. ஆனா கிடைக்கல. சரி போனா போவுது அமைச்சர் பதவியாவது தாருவாங்கன்னு பார்த்தா, அதுக்கும் வாய்ப்பு இல்லாம போச்சு.

சொந்த கட்சிய விளாச ஆரம்பிச்சாரு எத்னாலு. முதல்வரு, அமைச்சர் பதவிக்கு கோடிக்கணக்குல பணம் வாங்குறாங்கன்னு சொன்னாரு.

தேர்தல்ல பா.ஜ., தோற்றதும் எதிர்க்கட்சித் தலைவர் அல்லது மாநில தலைவரு பதவிய எதிர்பார்த்தாரு. அதுவும் கிடைக்கல. எதிர்க்கட்சித் தலைவர் பதவி எடியூரப்பா ஆதரவாளர் அசோக்கிற்கும், மாநில தலைவரு பதவி எடியூரப்பா மகன் விஜயேந்திராவுக்கும் கிடைச்சுது. இதனால இன்னும் கடுப்பு ஆனாரு எத்னாலு.

அப்பா – மகன கிழிச்சி தொங்கவிட்டாரு… ஆஹா… இது வேற மாதிரி போகுதேன்னு எத்னால சமாதானப்படுத்த பார்த்தாரு விஜயேந்திரர்…. ‘என் வீட்டு பக்கம் வந்துறாத அவ்வளவு தான், உனக்கு மரியாதை’ன்னு ஒரு அதட்டு அதட்டுனாரு எத்னாலு.

மாநில அரசியல்ல இருந்தா எத்னால சமாளிக்க முடியாதுன்னு தேசிய அரசியலுக்கு அனுப்ப அப்பா – மகன் பிளான் போட்டு இருக்காங்க. ஆனா அந்த பிளான் ஒர்க் அவுட் ஆகுமான்னு தெரியல.

லோக்சபா தேர்தல் பா.ஜ., வேட்பாளர் தேர்வு விஷயத்துல, அப்பா – மகன் சமரச அரசியல் செய்யுறாங்கன்னு, மறுபடியும் குண்டை துாக்கிப் போட்டு இருக்காரு எத்னாலு. அவரால அப்பா – மகன் ரெண்டு பேருக்கும் நிம்மதி கெட்டுப் போயிருக்கு.

இத்தனைக்கும் எடியூரப்பாவும், எத்னாலும் ஒரே ஜாதிகாரங்க தான். எத்னாலுக்கு ஒரு மடாதிபதியோட சப்போர்ட் இருக்கு. அவர அரசியல்ரீதியாக முடக்க நினைச்சாங்கன்னா பா.ஜ.,க்கு தான் ஆப்பு. இதனால என்ன செய்யுறதுன்னு தெரியாம, அப்பாவும் – மகனும் முழிச்சிட்டு இருக்காங்க.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.