தேர்தலில் வாக்களிக்க எந்தெந்த அடையாள அட்டைகளை பயன்படுத்தலாம்?

புதுடெல்லி: தேர்தலில் வாக்களிக்க எந்தெந்த அடையாள அட்டைகளை பயன்படுத்தலாம் என்பது குறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

அதன்படி, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்ட அட்டை, வங்கி அல்லது தபால் நிலையங்களில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பாஸ்புக், தொழிலாளர் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டுக்கான ஸ்மார்ட் கார்டு, ஓட்டுநர் உரிமம்,

பான் கார்டு, தேசிய மக்கள்தொகை பதிவேடு திட்டத்தின் கீழ் RGI (Registrar General & Census Commissioner, India) ஆல் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, இந்திய பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய அரசு / மாநில அரசு / பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை,


எம்பிக்கள் / எம்எல்ஏக்கள் / எம்எல்சிக்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் அதிகாரபூர்வ அடையாள அட்டை, மத்திய அரசின் நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையால் வழங்கப்படும் ஊனமுற்றோர் அடையாள அட்டை ஆகிய 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி வாக்காளர்கள் வாக்களிக்கலாம். | தேர்தல் அட்டவணை > ஏப்.19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக 2024 மக்களவைத் தேர்தல் – தமிழகத்தில் ஏப்.19-ல் வாக்குப் பதிவு

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.