Ee Sala Cup Namdhu: ஸ்மிருதி மந்தனா சொல்லிய அந்த வார்த்தை… குஷி மோடுக்கு சென்ற ஆர்சிபி ரசிகர்கள்

Royal Challengers Bangalore, Ee Sala Cup Namdhu: ஐபிஎல் தொடர் 2008ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேர்தல், பயங்கரவாத மிரட்டல்கள், பல சுற்றுச்சூழல் பிரச்னைகள், கொரோனா காலகட்டம் என பல கடினமான சூழல்களிலும் வருடாவருடம் ஐபிஎல் தொடர் ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெற்றுவிடும். 2020இல் மட்டுமே கரோனா காலத்தால் சில மாதங்கள் தள்ளிவைக்கப்பட்டது. 

அந்தளவிற்கு ஐபிஎல் தொடர் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 16 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் தொடருக்கு கிடைத்த வரவேற்பை வைத்து மகளிர் பிரீமியர் லீக் தொடர் கடந்தாண்டு தொடங்கப்பட்டது. ஐபிஎல் தொடரில் தற்போது 10 அணிகள் விளையாடும் நிலையில், WPL தொடரில் ஐந்து அணிகள் விளையாடின.

வீடியோ காலில் வந்த விராட் கோலி

மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் ஜெய்ன்ட்ஸ், UP வாரியர்ஸ் என ஐந்து அணிகள் WPL தொடரில் பங்கேற்றன. கடந்தாண்டு மும்பை அணி கோப்பையை வென்ற நிலையில், இந்தாண்டு ஆர்சிபி கோப்பையை வென்றுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல்முறையாக IPL, WPL வரலாற்றில் முதல்முறையாக கோப்பையை வென்றுள்ளது.

Cue the Golden Confetti, the Champions are here!

Once a dream is now a reality! Take a bow, girls!RCB #SheIsBold #WPL2024 #WPLFinal #DCvRCB pic.twitter.com/mgbZxo9Zyk

— Royal Challengers Bangalore (@RCBTweets) March 17, 2024

இன்று நடைபெற்ற WPL தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி அணியை வென்று ஆர்சிபி இந்த கோப்பையை கைப்பற்றியது. ராகுல் டிராவிட், கெவின் பீட்டர்சன், அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டரி, விராட் கோலி, வாட்சன், ஃபாஃப் டூ பிளேசிஸ் உள்ளிட்ட பலரும் ஆர்சிபிக்கு கேப்டனாக இருந்திருந்தாலும் ஸ்மிருதி மந்தனாவே முதல் கோப்பையை வென்று கொடுத்துள்ளார் எனலாம். இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற உடனேயே ஆர்சிபி ஆடவர் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி வீடியோ காலில் வந்து, மகளிர் அணிக்கு வாழ்த்து தெரிவித்தார். 

King Kohli congratulating all the RCB players on video call#ViratKohlipic.twitter.com/cc3qxw56Rd

— Ravi (@kukreja_ravii) March 17, 2024

தினேஷ் கார்த்திக், மேக்ஸ்வெல் என ஆர்சிபி வீரர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் வெற்றி பெற்ற மகளிர் ஆர்சிபி அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, பிரபல தொழிலதிபரும், ஆர்சிபியின் முன்னாள் உரிமையாளருமான விஜய் மல்லய்யா மகளிர் அணி வெற்றி பெற்றதற்கு ட்வீட் செய்துள்ளார். அதில்,”WPL தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மகளிர் ஆர்சிபி அணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நீண்ட காலமாக தவம் கிடக்கும் ஆர்சிபி ஆடவர் இந்த முறை ஐபிஎல் கோப்பையை வென்றால் அது அற்புதமான இரட்டை விருந்தாக இருக்கும்” என பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது. 

Heartiest congratulations to the RCB Women’s Team for winning the WPL. It would be a fantastic double if the RCB Men’s Team won the IPL which is long overdue. Good Luck.

— Vijay Mallya (@TheVijayMallya) March 17, 2024

முக்கியமாக, இன்று சாம்பியன் பட்டம் வென்று ஆறு கோடி பரிசுத்தொகையை பெற்ற பின்னர் ஆர்சிபி மகளிர் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பேசுகையில்,”ரசிகர்களுக்கு மிக்க நன்றி, தொடர்ந்து ஆதரவு அளித்து வந்ததற்கு… எப்போது ஆர்சிபி அணியை நோக்கி ‘ஈ சாலா கப் நம்தே’ (Ee Sala Cup Namdhe) என்ற கோஷம் எழுப்பப்படும். இனி அது ‘ஈ சாலா கப் நம்து’ (Ee Sala Cup Namdhu)” என்றார். தொடர்ந்து ஆர்சிபி கோப்பையை பெற்றதை அடுத்து, அந்த அணியின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.