மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மாவை நீக்க சச்சின் காரணமா?

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா அதிரடியாக நீக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். 5 முறை மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றபோது கேப்டனாக இருந்தவர் இந்த முறை திடீரென அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரோகித் சர்மா சிறப்பான கேப்டன் என்றாலும் அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாற்றம் தேவைப்படுவதால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதாக விளக்கம் அளித்தது. ஆனால், ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னணியல் சச்சின் டெண்டுல்கர் இருப்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சச்சின் டெண்டுல்கருக்கும், ரோகித் சர்மாவுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாகவே புகைச்சல் இருந்து வந்துள்ளது. ஏனென்றால் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்கும் அர்ஜூன் டெண்டுல்கருக்கு ரோகித் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அர்ஜூன் டெண்டுல்கர் ரோகித் சர்மாவை இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பாலோ செய்வதை அன்பாலோ செய்தார். சச்சின் டெண்டுல்கர் கடந்த 2 ஆண்டுகளாகவே ரோகித் சர்மாவை சதமடித்தபோதும், பல்வேறு சாதனைகளை செய்தபோதும் வாழ்த்துவதை தவிர்த்து வந்துள்ளார்.

கிரிக்கெட் தொடர்பான விஷயங்களை எப்போதும் அப்டேட்டாக இருக்கும் சச்சின், வங்கதேசம் அணிக்கு எதிராக கட்டவிரல் காயத்துடன் ரோகித் சர்மா 51 விளாசியபோதும், உலக கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 86 ரன்களும், இங்கிலாந்து அணிக்கு எதிராக 87 ரன்களும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 133 ரன்கள் அடித்தபோதும் எந்தவொரு பாராட்டு பதிவும் போடவில்லை. ஆனால் விராட் கோலி, சுப்மன் கில் ஐபிஎல் போட்டிகளில் உள்ளிட்ட எந்த போட்டிகளில் 100 ரன்கள் அடித்தாலும் தவறாமல் பாராட்டு தெரிவித்திருக்கிறார் சச்சின்.

கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் ரோகித் சர்மா 100 ரன்கள் அடித்தபோதும், டெஸ்ட் போட்டிகளில் கடந்த 2 ஆண்டுகளில் சதம் அடித்தபோதும் சச்சின் டெண்டுல்கரிடம் இருந்து ஒரு வாழ்த்து பதிவு கூட வரவில்லை. குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான உலக கோப்பை போட்டியில், அதுவும் ஸ்லோ பிட்சில் ரோகித் சர்மா 87 ரன்கள் விளாசியதற்கு எந்த பாராட்டும் தெரிவிக்காத சச்சின் ஒட்டுமொத்தமாக இந்திய அணிக்கு மட்டுமே வாழ்த்து தெரிவித்திருந்தார்.

விராட் கோலி, தோனி உள்ளிட்ட முக்கிய பிளேயர்களின் பிறந்தநாளுக்கு எல்லாம் தவறாமல் வாழ்த்து தெரிவித்துவிடும் சச்சின், 2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு ரோகித் பிறந்தநாளுக்கு மட்டும் வாழ்த்து தெரிவிப்பதை நிறுத்திக் கொண்டார். அதற்கு முந்தைய ஆண்டுகளில் ரோகித் சர்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார் சச்சின். அதேபோல் அண்மையில் நிறைவடைந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா சதமடித்தபோது எந்த பதிவும் போடாத சச்சின் ஜடேஜா சதமடித்ததும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு அந்த பதிவில் ரோகித்தையும் இணைந்துக் கொண்டார். அதேபோல் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் விராட் கோலி, யுவராஜ், ஏபி டிவில்லியர்ஸ், சுப்மன் கில், இஷான், எம்எஸ் தோனி, ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்டோரை எல்லாம் பாலோ செய்யும் சச்சின், ரோகித் சர்மாவை மட்டும் பின்தொடரவில்லை.

இவற்றை எல்லாம் பார்க்கும்போது தற்செயலாக நடப்பதுபோல் தெரியவில்லை. சச்சின் வேண்டுமென்றே ரோகித் சர்மாவை புறக்கணிப்பது தெரிகிறது. அதேபோல் அர்ஜூன் டெண்டுல்கர் ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட 530 பேரை இன்ஸ்டாகிராமில் பாலோ செய்யும் நிலையில், ரோகித் சர்மாவை மட்டும் பின்தொடரவில்லை. ஒருவேளை ஐபிஎல் 2024 தொடரில் அர்ஜூன் டெண்டுல்கர் 4 போட்டிகளுக்கும் மேலாக விளையாடிவிட்டார் என்றால், ரோகித் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதன் இந்த பின்னணியை புரிந்து கொள்ளலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.