நீண்ட நாள் கோரிக்கை.. விரைவில் WhatsApp புதிய அப்டேட்.. பயனர்கள் செம ஹேப்பி

WhatsApp Latest News: வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பயனர்களுக்காக ஒன்றன் பின் ஒன்றாக பல அம்சத்தை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், இப்போது நிறுவனம் அதன் பயனர்களை ஒரு நிமிடம் நீளமான வீடியோக்களை ஸ்டேட்டஸாக வைக்க அனுமதிக்கும் அம்சத்தை கொண்டு வரவுள்ளது. தற்போது இந்த அம்சம் சில பீட்டா பயனர்களுக்கு கிடைக்கிறது. தற்போது புதிய அப்டேட் அம்சத்தை சோதனை செய்து வருவதால், வரும் நாட்களில் படிப்படியாக அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் இந்த பதிய அப்டேட் கிடைக்கும். நீண்ட காலமாக வாட்ஸ்அப் நிறுவனத்திடம் ஸ்டேட்டஸில் வைக்கும் வீடியோக்களின் கால அளவை அதிகரிக்க வேண்டும் என பயனர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இறுதியாக 30 வினாடி ஸ்டேட்டஸ் வீடியோவை இனி 60 வினாடிகளாக இரட்டிப்பாக்க மாற்றப்படவுள்ளது. 

இனி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் 60 வினாடி வீடியோ வைக்கலாம்

தற்போதைய நிலவரப்படி, பயனர்கள் புகைப்படங்களைத் தவிர வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் 30 வினாடி வீடியோக்களை மட்டுமே பதிவேற்ற முடியும். வரும் நாட்களில் வாட்ஸ்அப் நிறுவனம் 30 வினாடிகளை 1 நிமிடமாக அதிகரிக்கப் போகிறது. இந்த புதிய அப்டேட் மூலம் பயனர்கள் 1 நிமிட கால வீடியோக்களை பதிவேற்ற முடியும். இது தவிர, மற்றொரு அம்சம் குறித்தும் வாட்ஸ்அப் நிறுவனம் சோதனை நடத்தி வருகிறது. அதில் 3 அரட்டைகளுக்கு மேல் பின் செய்யும் அம்சம் சோதனை சோதனை செய்யப்பட்டு வருகிறது. வரவிருக்கும் புதுப்பிப்புகளில் இது அம்சம் குறித்து வெளியிடப்படும்.

வாட்ஸ்அப் மூலம் பணம் செலுத்துவது எளிதாகிவிடும்

மெட்டாவுக்குச் சொந்தமான மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப் அதன் பயனர்கள் சாட் செய்ய அனுமதிப்பதோடு ஆன்லைனில் பணம் செலுத்தவும் அனுமதிக்கிறது. இப்போது நிறுவனம் எளிதாக ஆப் மூலம் பணம் செலுத்தும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இதன் கீழ், பயனர்கள் அரட்டை பட்டியலிலிருந்தே UPI குறியீட்டை ஸ்கேன் செய்யும் வசதியைப் பெறுவார்கள். இதற்காக, நிறுவனம் அரட்டை பட்டியலுக்கு மேலே ஒரு ஸ்கேனரை வழங்கும். தற்போது இந்த அம்சம் சில பீட்டா சோதனையாளர்களுக்குக் கிடைத்துள்ளது.

வாட்ஸ்அப் மோசடி மற்றும் வாட்ஸ்அப் ஸ்பேம் அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்

தற்போது வாட்ஸ்அப்பில் நிறைய மோசடி மற்றும் ஸ்பேம் அழைப்புகள் வரத் தொடங்கியுள்ளன. இந்த அழைப்புகள் வாட்ஸ்அப் பயனர்களை மிகவும் தொல்லைக்கு ஆளாக்கியுள்ளது. அந்த அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். 

உங்களுக்கு தெரியாத மற்றும் ஸ்பேம் அழைப்புகளில் இருந்து உங்களைப் பாதுகாக்கும் வகையில் Silence unknown callers அம்சம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஐந்த அம்சத்தின் முக்கிய பணி ஸ்பேம் அழைப்புகளை தானாக பில்டர் செய்வது. எனவே இந்த அம்சத்தை உடனடியாக செயல்படுத்துங்கள். ஸ்பேம் அழைப்புகளில் இருந்து விடுதலை பெறுங்கள். 

உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப்பை ஓபன் செய்யவும். Settingsகளுக்குச் சென்று Privacy என்பதை கிளிக் செய்யவும். Call tab Privacyல் கொடுக்கப்படும், அதை கிளிக் செய்யவும். இங்கு Silence unknown callers என்ற ஆப்ஷன் கிடைக்கும், அதை ஆன் செய்யவும்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.