ரியல்மி நார்சோ 70 புரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி நார்சோ 70 புரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது.

ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு, பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. பிரீமியம் விலையிலான போன்களையும் விற்பனை செய்து வருகிறது. தற்போது ரியல்மி நார்சோ பிராண்டின் கீழ் நார்சோ 70 புரோ 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • 6.7 இன்ச் AMOLED டிஸ்பிளே
  • மீடியாடெக் டிமான்சிட்டி 7050 சிப்செட்
  • ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
  • 50 மெகாபிக்சல் சோனி IMX890 கேமரா பின்பக்கத்தில் பிரதான கேமராவாக இடம் பெற்றுள்ளது
  • 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 5,000mAh பேட்டரி
  • 67 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் திறன்
  • 8ஜிபி ரேம்
  • 128/256ஜிபி என இரண்டு ஸ்டோரேஜ் வேரியன்ட்டில் இந்த போன் வெளிவந்துள்ளது
  • 5ஜி நெட்வொர்க்
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
  • இரண்டு வண்ணங்களில் வெளிவந்துள்ளது
  • வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 22) இந்த போன் விற்பனைக்கு வருகிறது
  • இதன் விலை ரூ.19,999 முதல் தொடங்குகிறது
  • விலையில் அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.