ஆப்கானிஸ்தான் 'ஏ' கிரிக்கெட் அணி இலங்கைக்கான சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது..

ஆப்கானிஸ்தான் ‘ஏ’ கிரிக்கட் அணி ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இலங்கைக்கு வரவுள்ளதாகவும், இலங்கை ‘ஏ’ அணியுடன் ஐந்து ஒரு நாள் போட்டிகளிலும் நான்கு ஒரு நாள் போட்டிகளிலும் பங்கேற்க உள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து ஒரு நாள் போட்டிகள் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், நான்கு ஒரு நாள் போட்டி வனாத்தமுல்ல பி. சரவணமுத்து மைதானத்திலும் நடைபெறவுள்ளது.

ஒரு நாள் போட்டி 2024 ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், நான்கு ஒரு நாள் போட்டிகள் 2024 மே மாதம் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையும் நடைபெற உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.