IPL 2024: சென்னை அணியில் இணைந்த இரண்டு முக்கிய வீரர்கள்!

IPL 2024 Chennai Super Kings: கடந்த திங்கட்கிழமை இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி போட்டியின் போது வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானுக்கு காலில் காயம் ஏற்பட்டது. ஒன்பது ஓவர்கள் பந்துவீசிய அவரால் கடைசி ஓவரை வீச முடியவில்லை. மைதானத்தில் நிற்க கூட முடியாத நிலையில் ஸ்ட்ரெச்சர் வைத்து கொண்டு செல்லப்பட்டார்.  இதனை பார்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். ஏனெனில், இந்த ஆண்டு ஐபிஎல் 2024ல் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று இருந்தார் முஸ்தாபிசுர் ரஹ்மான். 

Excited and Looking forward to my new assignment. Heading to Chennai for IPL 2024. Keep me in your prayers so that I can deliver my best.#WhistlePodu #Yellove  pic.twitter.com/mMS56cp38T

— Mustafizur Rahman (@Mustafiz90) March 19, 2024

சிஎஸ்கே அணியில் ஏற்கனவே தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே மற்றும் மகேஷ் பத்திரனா காயம் அடைந்துள்ள நிலையில், இவரது காயம் ரசிகர்களை வருத்தமடைய செய்தது. இந்நிலையில், அதற்கு அடுத்த நாளே யாரும் எதிர்பார்க்காத வகையில் சென்னை அணியுடன் இணைந்துவிட்டதாக தனது X கணக்கில் தெரிவித்துள்ளார் முஸ்தாபிசுர் ரஹ்மான். “உற்சாகமாகவும் எனது புதிய பணிக்காகவும் காத்திருக்கிறேன். ஐபிஎல் 2024க்காக சென்னைக்குச் செல்கிறேன். உங்கள் பிரார்த்தனையில் என்னைக் காத்துக்கொள்ளுங்கள், அதனால் என்னால் முடிந்ததைச் செய்ய முடியும்” என்று பதிவிட்டுள்ளார்.  இது சென்னை ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் துபாயில் நடந்த ஐபிஎல் 2024 மினி ஏலத்தில் முஸ்தாபிசூர் ரகுமான் சென்னை அணியினால் 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.  சென்னை அணியில் அவர் எப்படி விளையாட போகிறார் என்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

Did someone say SIXERS?#WhistlePodu #DenComing pic.twitter.com/xQaJoDZG3t

— Chennai Super Kings (@ChennaiIPL) March 19, 2024

மேலும் காயத்தில் இருந்த மற்றொரு வீரரான சிவம் துபேவும் சென்னை அணியில் கடைசி நேரத்தில் இணைந்துள்ளார்.  சென்னை அணிக்கு கடந்த சில சீசன்களாக மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடி வரும் துபேவிற்கு ரஞ்சி போட்டியின் போது காயம் ஏற்பட்டது. அதன்பின்பு, பிசிசிஐ தரப்பில் இருந்தும் எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.  மேலும் சென்னை அணியின் பயிற்சி போட்டிகளிலும் சிவம் துபே பங்கேற்கவில்லை. இந்நிலையில், நேற்று இவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார்.  ஐபிஎல் 2024 தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறது.

ஐபிஎல் 2024க்கான சிஎஸ்கே அணி: எம்எஸ் தோனி, டெவோன் கான்வே, அவனிஷ் ராவ் ஆரவெல்லி, ருதுராஜ் கெய்க்வாட், ஷேக் ரஷீத், அஜிங்க்யா ரஹானே, சமீர் ரிஸ்வி, மொயீன் அலி, சிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரச்சின் ரவீந்திரா, ரவீந்திர ஜடேஜா, நிட்செல்லன்ட் சான்டால் ரவீந்திரா, டேரில் மிட்செல், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பத்திரனா, சிமர்ஜீத் சிங், பிரசாந்த் சோலங்கி, மஹீஷ் தீக்ஷனா, முஸ்தபிசுர் ரஹ்மான், முகேஷ் சவுத்ரி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.