ஐ.பி.எல். அமைப்பின் மதிப்பு இத்தனை கோடியா?

சென்னை,

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நாளை கண்கவர் கலை நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்குகிறது. நாளை இரவு 8 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மோதுகின்றன.

கடந்த 2008-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் தற்போது ரசிகர்களின் அமோக வரவேற்பால் அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ளது. இதன் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.89 ஆயிரம் கோடி என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இதில் 5 ஆண்டுகளுக்கு தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் மூலம் ரூ.48,390 கோடி வருவாய் கிடைப்பதும், 10 அணிகளின் மதிப்பும் அடங்கும். அதாவது ஐ.பி.எல். தொடங்கியதில் இருந்து 433 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

ரூ.439 கோடிக்கு வாங்கப்பட்ட மும்பை இந்தியன்சின் தற்போதைய மதிப்பு ஏறக்குறைய ரூ.7,300 கோடி என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.