CSK அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்த எம்எஸ் தோனி… ரசிகர்கள் அதிர்ச்சி

Indian Premier League 2024: நாளை ஐபில் 2024 சீசனின் முதல் போட்டி தொடங்கவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி முடிவு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆம், இந்த ஐபிஎல் சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அனிடின் புதிய கேப்டனை அறிவித்துள்ளது. ஐபிஎல் 17வது சீசன் தொடங்குவதற்கு முன்பே எம்எஸ் தோனி கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை மார்ச் 22 ஆம் தேதி இரவு 8 மணிக்கு எதிர்க்கொள்ள உள்ளது. இருப்பினும், இந்த போட்டியில் தோனி ஒரு வீரராக விளையாடுவார். தோனி தனது முடிவால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். சிஎஸ்கே தனது புதிய கேப்டனாக ரிதுராஜ் கெய்க்வாட்டை அறிவித்துள்ளது.

முன்பு ரவீந்திர ஜடேஜாவிடம் கேப்டன் பொறுப்பு

ஐபிஎல் 2024 தொடரின் முதல் போட்டி நாளை (மார்ச் 22, வெள்ளிக்கிழமை) சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி இடையே நடைபெற உள்ளது. ஆனால் இதற்கு முன்பே, எம்எஸ் தோனி கேப்டன் பதவியை விட்டு வெளியேறி, தனது முடிவால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார். ஆனால், இதற்கு முன்பே கேப்டன் பதவியை ராஜினாமா செய்த தோனி, ரவீந்திர ஜடேஜாவிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தார். ஆனால் ஜடேஜாவின் மோசமான ஆட்டத்தால், தோனி மிடில் லீக்கில் மீண்டும் தலைமை தாங்கினார்.

மொத்தம் 10 முறை இறுதிப் போட்டிக்கு அணியை அழைத்து சென்ற கேப்டன் தோனி

சென்னை சூப்பர் கிங்ஸை ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனாக்கியவர் எம்எஸ் தோனி. இது தவிர, தோனி ஐந்து முறை அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார். தோனியின் தலைமையில் மொத்தம் 10 இறுதிப் போட்டிகளில் சிஎஸ்கே விளையாடியுள்ளது. அவரது தலைமையின் கீழ் சென்னை அணி 2010, 2011, 2018, 2021 மற்றும் 2023 ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்றது. அதேசமயம் 2008, 2012, 2013, 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் சென்னை அணி இறுதிப் போட்டியில் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது.

சென்னை அணியின் கேப்டனாக ரிதுராஜ் கெய்க்வாட் தேர்வு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை தொடக்க ஆட்டக்காரர் ரிதுராஜ் கெய்க்வாடிடம் ஒப்படைத்துள்ளது. ஐபிஎல்லுக்கு ஒரு நாள் முன்பு, கோப்பையுடன் 10 கேப்டன்களின் போட்டோஷூட் நடந்தது, அதில் தோனிக்கு பதிலாக ரிதுராஜ் கெய்க்வாட் வந்தார். 

ரிதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் பயணம்

ரிதுராஜ் கெய்க்வாட் இதுவரை சென்னை அணிக்காக 3 சீசன்களில் மட்டுமே விளையாடியுள்ளார். அவர் 2020 ஆம் ஆண்டில் அறிமுகமானார். அதன் பிறகு அவர் வலுவாக செயல்பட்டு வருகிறார். இதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் கெய்க்வாட் சதம் அடித்துள்ளார். இதுவரை 52 போட்டிகளில் 39 சராசரியில் 1797 ரன்கள் எடுத்துள்ளார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.