நீங்களும் வாங்கலாம் ஐபோன் 14 பிளஸ்… பிளிப்கார்டில் இப்போது தள்ளுபடி விலையில்!

Iphone 14 Plus Flipkart Discount Details: ஐபோன் வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாகும். ஸ்மார்ட்போன் வைத்துக்கொள்வது என்பது ஒருவரின் அன்றாட வாழ்வுக்கு மிகவும் தேவையான ஒன்று என்றாலும் தற்போது அந்த நிலை முற்றிலும் மாறிவிட்டது எனலாம். நீங்கள் எந்த ஸ்மார்ட்போனை வைத்திருகிறீர்கள் என்பதை பொறுத்தே கல்லூரியிலோ, பணியிடத்திலோ, பொது இடங்களிலோ ஒருவரின் அந்தஸ்து நிர்ணயம் செய்யப்படுகிறது என்பது பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. 

அந்த வகையில் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களை விட ஆப்பிள் மொபைலை வைத்திருப்பதையும் பலரும் கௌரவமாக கருதுகின்றனர். ஏனென்றால், அதன் விலை ஒருபுறம் என்றாலும் அதில் உள்ள வசதிகளும், சிறப்பம்சங்களுமே ஐபோன் ஸ்மார்ட்போன்களை வாங்க வாடிக்கையாளர்களை தூண்டுகின்றன எனலாம். இது சரியா தவறா என்பது ஒருபுறம் இருக்க, ஐபோன் எவ்வளவு ஸ்மார்ட்டாக வாங்கலாம் என்பதைதான்  இங்கு காணப் போகிறோம். 

ஐபோன் 16 சீரிஸிற்கு வெயிட்டிங்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்கள் உள்ளன. இதை தொடர்ந்து இந்தாண்டு ஐபோன் 16 சீரிஸ் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வரும் செப்டம்பரில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 சீரிஸை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சிலருக்குதான் ஐபோனின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனை உடனே வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். பலரும் பழைய மாடலை வாங்கவே மிகவும் விரும்புவார்கள். அதற்கான முதன்மையான காரணம், குறைவான விலை. அந்த வகையில் தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 மாடல் பிளிப்கார்ட்டில் நல்ல தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்நிலையில், பிளிப்கார்டில் அதன் தள்ளுபடி விவரம் குறித்தும், அந்த மொபைலின் சிறப்பம்சங்கள் குறித்தும் இதில் காணலாம். 

பிளிப்கார்ட்டில் அதிரடி ஆப்பர்

ஐபோன் 14 பெரிய ஸ்கிரீன் கொண்ட மொபைல் தேவைப்படுபவர்களுக்கு சரியாக இருக்கும். ஐபோன் 14 சீரிஸில் ஐபோன் 14 பிளஸ் மாடல் மீதுதான் பிளிப்கார்ட் தள்ளுபடியை வழங்குகிறது. ஐபோன் 14 பிளஸ் மொபைலின் அசல் விலை 79 ஆயிரத்து 900 ரூபாய் ஆகும். இந்த விலையில் இருந்து பிளிப்கார்ட் தள்ளுபடி வழங்குகிறது அதாவது, சுமார் 16% பிளிப்கார்ட் ஐபோன் 14 பிளஸ் மீது தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதாவது இதன் மூலம் ஐபோன் 14 பிளஸ் 66 ஆயிரத்து 999 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

எக்ஸ்சேஞ் ஆப்பரும் உள்ளது

இது மட்டுமில்ல, இந்த மொபைலை நீங்கள் வாங்க நினைத்தால் இன்னும் சில ஆப்பர்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன. உங்களிடம் நல்ல நிலையில் பழைய ஐபோன் 13 அல்லது ஐபோன் 13 மினி மொபைல் இருந்தால், அதனை எக்ஸ்சேஞ் ஆப்பரில் கொடுத்தால் 23 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். இதன்மூலம், நீங்கள் ஐபோன் 14 பிளஸ் மொபைலை 44 ஆயிரத்து 97 ரூபாய்க்கு வாங்கலாம். அதாவது மொத்தம் 35 ஆயிரத்து 603 ரூபாயில் நீங்கள் இந்த மொபைலை வாங்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.