சந்தையில் குதித்திற்கும் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்கள் – ரூ.20 ஆயிரத்திற்கு குறைவான விலையில்…!

5G Smartphone March Release 2024: ஸ்மார்ட்போன் சந்தையில் ஒவ்வொரு மாதமும், ஏன் ஒவ்வொரு வாரமும் புதுப் புது மாடல் விற்பனைக்கு வருவது வாடிக்கையாகிவிட்டது. ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவோரி எண்ணிக்கை தற்போது அதிகமாகிவிட்டது. அனைத்து தரப்பினரும் ஸ்மார்ட்போன்களை வைத்திருக்க விரும்புவதால் அனைத்து தரப்பினருக்கும் ஏற்றாற்போல் பல்வேறு அம்சங்கள் மொபைல்கள் சந்தைகளில் அறிமுகமாகின்றன. 

குறிப்பாக, இந்தியாவில் தற்போது 5ஜி ஸ்மார்ட்போன்களின் தேவை அதிகமாகி உள்ளது. 5ஜி சேவைகள் நாடு முழுவதும் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களால் வரம்பற்ற வகையில் கொடுக்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கவே ஆர்வம் காட்டுகின்றனர். எனவே இந்திய சந்தைகளை குறிவைத்து பல்வேறு நிறுவனங்களின் 5ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

அந்த வகையில், இந்த வாரமும் பல ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி உள்ளன. இந்த வாரம், பட்ஜெட் விலையில் இருந்து இடையிடப்பட்ட விலை வகை வரை சில ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றில், Lava O2,  Vivo T3 5G, Realme Narzo 70 Pro 5G ஆகிய மொபைல்கள் முக்கியமானவை.

இதில், Lava O2 இந்த பட்டியலில் பட்ஜெட்டுக்கு ஏற்ற மொபைலாகும். மற்ற ஸ்மார்ட்போன்களும் ரூ.20 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைல்களின் சிறப்பம்சங்களை இதில் காணலாம். 

Lava O2

இது இந்தியாவில் மார்ச் 23 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போனின் ஆரம்ப விலை 7 ஆயிரத்து 999 ஆகும், இதில் 8ஜிபி RAM மற்றும் 128ஜிபி இன்டெர்நல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே உள்ளது. புகைப்படம் எடுப்பதற்காக, 50MP AI இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்கு 8MP கேமரா உள்ளது. போனின் பேட்டரி 5000mAh ஆகும்.

Vivo T3 5G

இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் மார்ச் 31 அன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த போனின் ஆரம்ப விலை 17 ஆயிரத்து 999 ரூபாய் ஆகும். இந்த மொபைல், 6.67 இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது தவிர, இந்த போனில் MediaTek Dimensity 7200 பிராஸஸர் பொருத்தப்பட்டுள்ளது. புகைப்படம் எடுப்பதற்கு, இதில் 8MP அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் 2MP டெலிஃபோட்டோ சென்சார் ஆகியவை அடங்கிய பின்புற இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்காக 16MP கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரி 5000mAh ஆகும், இதில் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

Realme Narzo 70 Pro 5G 

இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் மார்ச் 19 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போனின் ஆரம்ப விலை  18 ஆயிரத்து 999 ரூபாய் ஆகும். இந்த மொபல் 8ஜிபி RAM, 128ஜிபி இன்டெர்நல் ஸ்டோரேஜ் உடன் வரும்.  இந்த மொபைல், 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் (Refresh Rate) 6.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது தவிர, இந்த போனில் MediaTek Dimensity 7050 செயலி பொருத்தப்பட்டுள்ளது. 

இதில் 8MP அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் ஆகியவை அடங்கிய பின்புற கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்காக 16MP முன்புற கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த மொபைலின் பேட்டரி 5000mAh ஆகும். இதில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.