ஈரோடு மதிமுகவைச் சேர்ந்த ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி செய்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரோடு தொகுதி கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டது. இங்கு கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் நேரடியாக தி.மு.க. போட்டியிடுகிறது. திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி பிரசாரத்தை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக கணேசமூர்த்தி அருகில் உள்ள […]