சோளச் செய்கைக்கான விதைகளைத் தயாரிக்கும் மத்திய நிலையம் வவுனியா நெலுக்குளத்தில் திறந்து வைப்பு

நாட்டில் சோள உற்பத்தியை அதிகரிப்பதற்கு அவசியமான சோளச் செய்கை;கான விதைகளைத் தயாரிப்பிற்கு 390 மில்லியன் ரூபா செலவில் நிருமாணிக்கப்பட்ட சோள விதைகளைத்  தயாரிக்கும் மத்திய நிலையம் வவுனியா நெலுக்குளத்தில்  விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில்   அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் திறந்து (23) வைக்கப்பட்டது.

விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் போது இம்மத்திய நிலையத்திற்கு அவசியமான 390மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு விவசாய அமைச்சின் விவசாய நவீன மயப்படுத்தல் திட்டத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது நமது நாட்டில் சோள விதைகள் 1600 மெற்றிக் தொன் அவசியமாவதுடன், இதில் ஆறில் ஒரு பகுதி இந்நிலையத்தினால் தயாரிக்கப்படவுள்ளதுடன், 300 ஏக்கர் நிலத்தில் 300 விவசாயிகள் சோள உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர சோள விதை இறக்குமதியை நிறுத்தி  அவசியமான சகல விதைகளையும் நாட்டிலேயே உற்பத்தி செய்வதே தமது நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.

தற்போது நாட்டிற்கு அவசியமான சோளத்தின் அளவை வருடாந்தம் ஐந்து இலட்சம் மெற்றிக் டொன்னாக அதிகரித்து அதில் நூற்றுக்கு 50வீதம் அளவில் நாட்டில் உற்பத்தி செய்வதற்கு முடியுமாயினும் மீதி 50வீதத்தை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.  இதனால் வெளிநாடுகளுக்குச் செல்லும் டொலரின் அளவை நாட்டில் சேமித்தல் அரசின் நோக்கம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.